|
இன்றைய சண்டே ஸ்பெஷல் ரெசிபி- பிராக்கோலி நூடுல்ஸ்
தேவையான பொருட்கள்
ட்ரைடு நூடுல்ஸ் - ஒரு பாக்கெட்
ப்ரோகோலி - ஒன்று
கேரட் - ஒன்று
வெங்காயம் - ஒன்று
கறி - ஒரு கோப்பை
பச்சை குடைமிளகாய் - பாதி
மஷ்ரூம் - சிறிது
ஆலிவ் ஆயில் - 3 தேக்கரண்டி
மிளகு தூள் - ஒரு தேக்கரண்டி
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் ப்ரோக்கோலியை சிறு சிறு துண்டுகளாகவும், வெங்காயம் மற்றும் மஷ்ரூமை நீளமாகவும் நறுக்கி கொள்ளவும்.
பின்னர் நறுக்கி வைத்துள்ள ப்ரோக்கோலியை பத்து நிமிடங்கள் கொதி நீரில் போட்டு வைக்கவும்.
அதே சமயம், பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்தவுடன் நூடுல்ஸை போட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் கடாயில் கறியை போட்டு, உப்பு மற்றும் மிளகு தூள் கொஞ்சம் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
கறி வெந்தவுடன், கேரட், வெங்காயம், குடை மிளகாய், மஷ்ரூம், ப்ரோகோலி அனைத்தையும் போட்டு காய்களுக்கு தேவையான உப்பு, மிளகு தூளும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
அனைத்தும் வெந்தவுடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து பிரட்டியவுடன், நூடுல்ஸை போட்டு நன்றாக கிளறினால் சுவையான ப்ரோகோலி நூடுல்ஸ் ரெடி!!!
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக