வானத்தை முழுவதாக மறைப்பது போல் கண்கவர் காட்சியாக விளங்கும் அந்த இடப்பெயர்வில் மொனார்க் பட்டாம்பூச்சிகள் சுமார் 2500 மைல் தூரத்தை பறந்தே கடக்கின்றன.
பட்டாம்பூச்சிகளில் எண்ணற்ற வகைகள் இருந்தாலும் இந்த அரிய வகை மொனார்க் பட்டாம்பூச்சிகள் மட்டுமே பறவை இனத்தை போல ஆண்டுதோறும் மிகப்பெரிய இடப்பெயர்வை மேற்கொள்கின்றன.
இந்த இடப்பெயர்வுக்காக தான் உண்ணும் உணவை தன் உடலில் கொழுப்பாக சேர்த்துவைத்து பயன்படுத்தி கொள்கின்றன.
பனிக்காலத்தில் வட அமெரிக்காவில் இருந்து மெக்சிகோ நோக்கி பறக்கும் இந்த பட்டாம்பூச்சிகள் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 10,000 அடி உயரத்தில் இருக்கும் மலைகளில் உள்ள மரங்களில் தஞ்சம் அடைகின்றன.
இந்த உயரத்தில் இருப்பதால் அந்த பட்டாம்பூச்சிகள் காற்று, மழை, பனி மற்றும் இதர விடயங்களால் பாதிப்படையாமல் பாதுகாப்பாக உள்ளன.
அங்குள்ள குளிர்ந்த வெப்ப நிலையில் மரங்களின் கிளைகள், இலைகள் என மொத்த மரத்தையும் மறைப்பதை போல பட்டாம்பூச்சிகள் அமர்ந்து கொள்கின்றன.
பின்னர் குறிப்பிட்ட காலத்திற்கு பின் அங்கிருக்கும் பட்டாம்பூச்சிகள் தெற்கு நோக்கி இடப்பெயர்வை மேற்கொள்ளத் தொடங்குகின்றன.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
திங்கள், 13 அக்டோபர், 2014
ஆண்டுதோறும் நடக்கும் கண்கவர் அதிசயம்! மிஸ் பண்ணிடாதீங்க (வீடியோ இணைப்பு) !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக