தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

ஆஹா என்ன அமிர்தம் இது… நீராகாரம் !

கிராம மக்களின் தினசரி காலை நேர பானமாகவும், பலருக்கு உணவாகவும் தொன்று தொட்டு இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம்தான் சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்.
முதல் நாள் இரவில் 2 பிடி சோற்றை ஒரு மண்சட்டியில் அல்லது பாத்திரத்தில் போட்டு 2 குவளை தண்ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும்.
காலையில் எழுந்ததும் இதில் தேவையான உப்பு சேர்த்து பருகலாம். கூட சிறிய வெங்காயம் கடித்து சாப்பிட்டால் இன்னும் கூடுதல் ருசி.
நீராகாரத்தில் வைட்டமின்கள் பி6, பி12 உள்ளது. நீராகாரம் பருகுவதால் உடல் லேசாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.
வாத நோய்களான பக்க வாதம், கைகால் அசதி, முடக்கு வாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், ரத்த மூலத்தை கட்டுபடுத்துகிறது. சருமத்தில் வேர்க்குரு வராது, சரும நோய்கள் வராமல் தடுக்கும், வயிற்றுவலி நீங்குவதோடு மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். மேலும் சிறுகுடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களால் உணவு பாதையே சுத்தமாகும். கூடவே வெங்காயம் சேர்த்த சாப்பிடும்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.
காலையில் சாண்ட்விஜ், பீட்ஸா, பர்கர் சாப்பிடுபவர்கள் இன்று முதல் நீராகாரம் சாப்பிட்டு நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக