டார்ஜிலிங் பற்றி நினைக்கும் போதே வியப்பு மேலிடுகிறது. அள்ள, அள்ளக் குறையாத இன்பங்களை வாரித்தரும் ஓர் அற்புதமான சுற்றுலாத்தலம் டார்ஜிலிங் என்றால் அது மிகையல்ல.
எந்நேரமும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தேனீக்கள் போல மொய்த்திருக்கும் இடம்தான் டார்ஜிலிங்.
டார்ஜிலிங்கில் பார்க்க வேண்டிய படங்கள் அதிகம் இருந்தாலும் கஞ்சன்ஜங்கா, மிர்க் ஏரி, டைகர் ஹில் சன் ரைஸ், வார் மெமோரியல் போன்ற இடங்களை கண்டிப்பாக மிஸ் பண்ணவே தோனாது,
டார்ஜிலிங் போர் நினைவுச்சின்னத்திலிருந்து கஞ்சன்ஜங்கா மலையின் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம்.
நார்மலான பருவநிலை நிலவும்பட்சத்தில் இந்த மலைகள் வானத்திலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும் வெள்ளை நிற சுவர்கள் போன்று காட்சியளிக்கின்றன. சிக்கிம் மாநில மக்கள் இம்மலையை புனித மலையாக கருதுவதும் குறிப்பிடத்தக்கது.
மிர்க் ஏரியில் உல்லாசப் படகு சவாரி செய்யலாம். இதற்காக பலவிதமான வண்ணங்களில் பலவிதமான படகுகள் படகுத்துறையில் நமக்காகவே வரிசை கட்டி காத்துக்கிடக்கின்றன.
டார்ஜீலிங்கில் இருந்து 11 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது இந்த டைகர் மலை. இங்கு இருந்து சூரிய உதயம் பார்க்கும்போது இமயமலை பல வண்ணங்களில் மாறுவதை நீங்கள் பார்க்கலாம்,
நீங்கள் கண்டிப்பாக டார்ஜிலிங் சென்றால் இந்த இடங்களையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக