தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 13 ஆகஸ்ட், 2014

ஆரோக்கியம் தரும் வெஜிடபிள் தோசை!

இந்த காலத்துல குழந்தைகளை சாப்பிட வைக்கிறது ரொம்பவே சிரமமான விடயம் தான்.
அதுலயும் ஆரோக்கியம்   நிறைந்த சத்தான உணவுகளை சமைத்து கொடுக்க வேண்டியது தாய்மார்களின் கடமை.
நாம் இன்று பார்க்க போவது வெஜிடபிள் தோசை, இதுல காய்கறிகள் இருப்பதால் எண்ணற்ற சத்துக்கள் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
தேவையானவை:
பாசிப்பயிறு - 2 கப்,
கோதுமை ரவை - 1கப்,
பச்சை மிளகாய் - 3,
காய்ந்த மிளகாய் - 4,
சீரகம் - 1 ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
வெஜிடபிள் செய்ய தேவையானவை:
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி நறுக்கிய கலவை - 1கப்,
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 3,
உப்பு - தேவையான அளவு,
கடுகு, சீரகம் - தாளிக்க
வெஜிடபிள் செய்முறை
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
இதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும், இதில் தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
தோசை செய்முறை
பாசிப்பயிறை 3 மணி நேரம் ஊறவைத்து, அதோடு, சீரகம், மிளகாய் சேர்த்து நன்கு மிருதுவாக தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
அதில் கோதுமை ரவையைக் கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.
தோசைகல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தோசை மாவை ஊற்றி, அதன் மேல் தயாரித்து வைத்துள்ள வெஜிடபிள் கலவையை போடவும்.
நன்கு வெந்த பிறகு சூடாக பரிமாறலாம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக