தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

வானம் ஏன் நீல நிறமாக தெரிகிறது?


வானம் ஏன் நீல நிறமாக தோன்றுகிறது என்ற கேள்வி பலரின் மனதில் தோன்றியிருக்கலாம்.
பொதுவாக சூரியனில் இருக்கும் நிறமானது பல நிறங்களை உள்ளடக்கியது. இதனை வானவில்லில் அவதானிக்கலாம்.
வாயுமண்டலத்தில்(ATMOSPHERE) கூடுதலான சதவிகிதம் (78 % நைற்றஜென், 21 % ஒக்சிஜென்) வாயுக்களும் மிகுதி நீராவியும் மாசுத்துணிக்கைகளும் உண்டு.
அவற்றினூடே ஒளி பூமியை வந்தடைகிறது. ஒளி அலைகள் வேறுபட்ட அலைநீளத்தை உடையவை. சிவப்பு நிறம் கூடிய அலை நீளம் கொண்டது. நீல நிறம் குறைந்த அலைநீளம் உடையது.
கூடிய அலைநீளம் உடைய ஒளி அலைகள் பூமியை வந்தடைகின்றன. குறுகிய அலைநீளம் உடைய துணிக்கைகள் நிறத்தை உருவாக்குகின்றன. அவை தெறிப்பு அடைந்து நீல நிறமாக வானம் தோன்றுகிறது.
இவைகள் காற்றிலுள்ள ஒளியைச் சிதறடிக்கின்றன. சிதறிய ஒளி மேலும் மேலும் சிதறடிக்கப்படுகிறது. இவ்வாறு நடைபெறும் போது மிக அதிகத்துடிப்புடைய நீல நிறம் மிக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது.(சிவப்பு மிகக்குறைவாக சிதறுகிறது)
நாம் பார்க்கும் போது அவ் ஒளி அலைகள் கண்ணை வந்தடைகின்றன. அதனாலேயே பகலில் வெறுமனே வாயுத்துணிக்கைகள், மாசுக்களால் மேலே கூறப்பட்ட ஒளியால் ஆனதே தவிர அப்படி ஒன்று இல்லை என்பதே உண்மை.
பௌதீக விதிப்படி ஒரு நிறத்தின் ஒளி அலைகளின் நீளம் அதிகமாக இருந்தால் அவை நம் பார்வைக்குக் கிடைக்காமலே போய்விடும். வானம் நீல நிறமாக இருப்பதால் அதை பிரதிபலிக்கும் கடலும் நீல நிறமாகவே இருக்கிறது.
சூரிய உதயம், அஸ்மதனத்தின் போது சிவப்பாக தெரிவது ஏன்?
காலை மாலை சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தின் போது மட்டும் சிவப்பாக தெரிகிறது. அதற்கு காரணம் சூரியக்கதிர்களில் உள்ள சிவப்பு நிறத்தின் ஒளியலைகள் மின்குமிழில் இருந்து வரும் வெள்ளை, நீல நிற ஒளி வாயுத்துணிக்கைகளால் உறிஞ்சப்படுகிறது.
உறிஞ்சிய அணு மண்டலத்தில் மூலக்கூறுகள் இடையூறில்லாமல் நீர்த்துளிகள் மற்றும் பனிமூட்டம் போன்றவற்றின் மீது பயணம் செய்வதால் வானம் நீலநிறமாக இருப்பது போல தோன்றுகிறது.
இரவில் நிலவின் ஒளி, நட்சத்திரங்களின் ஒளி ஆகியவை பலம் குறைந்த ஒளியாக இருப்பதால் அந்த சிதறல்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. நேராக வரும் ஒளியை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக