தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 ஏப்ரல், 2014

உலக சுகாதார தினம்


உலக சுகாதார  தினமான இன்று, இந்த உலகம் சுகாதாரமாக உள்ளதா என்று கேள்வி எழுப்பினால் நம்மில் அனேகரிடமிருந்து பதில் வருவது கொஞ்சம் சந்தேகம்தான்.
சுத்தம் சோறு போடும் என்ற பழமொழி மாறி அசுத்தமானது தற்போது ஒவ்வொரு மனிதனிடமும் குடிகொண்டுள்ளது. மனிதனும் இந்த அசுத்தத்துடனே வயிற்றை கழுவிக்கொண்டு வாழ்நாளை  கழிக்க ஆரம்பித்து விட்டான்.
அசுத்தமே எங்கும் நிறைந்துள்ள நிலையில், உலக சுகாதார தினமான இன்று சுகாதாரம் பற்றி ஒரு சிறப்பு பார்வையினை காணலாம்.
உலக சுகாதார தினம்
இத்தினமானது ஏப்ரல் 7ம் திகதி உலக சுகாதார நிறுவனத்தின் ஆதரவுடன் கொண்டாடப்படுகிறது. இந்நிறுவனம்  ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அமைப்பாகும். 1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் திகதி தொடங்கப்பட்ட இந்நிறுவனம் அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை செய்யும் அதிகாரம் படைத்தது.
1948 ம் ஆண்டில் நடைபெற்ற உலக சுகாதார நிறுவனத்தின் கூட்டம் ஒன்றில் 1950-ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும்,  உலக சுகாதார நிறுவனம் தொடங்கிய தினமான ஏப்ரல் 7ம் திகதியை உலக சுகாதார நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது.
உலக சுகாதார நிறுவனத்தின் நோக்கம்
உலகில் உள்ள அனைவருக்கும் இயன்றவரை ஆகக்கூடுதலான சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொடுப்பதனையே இந்நிறுவனம் நோக்கமாக கொண்டுள்ளது.
இதன் முக்கிய செயல்திட்டமாக தொற்றுநோய்கள் போன்ற கொடிய நோய்களுடன் போராடுதல் மற்றும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் பொதுச் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவதாகும்.
1995ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளில் சுகாதாரத்தை அதிகம் பாதிக்கும் முக்கியமான பிரச்சனைகளை தெரிவு செய்து, அதை அந்த ஆண்டிற்குள் கூடுமானவரையில் முற்றிலும் ஒழிக்க உலக அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள்
இந்நிறுவனம் இளம்பிள்ளை வாதம், தரமான வாழ்வு, பாதுகாப்பான தாய்மை, வீதி பாதுகாப்பு, மனவளம் போன்ற மக்களை அச்சுறுத்தும் பிரச்சனைகளை முற்றிலும் சரி செய்ய உலக அளவில்  முயற்சி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் உலக சுகாதார தினம் 2014ம் ஆண்டில்,  ரத்தத்தை உறிஞ்சி குடிக்கும் நுண்ணுயிர்களால் ஏற்படும் நோய்களை முற்றிலுமாக கண்காணிக்கவும், பாதுகாப்பு முறைகளை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
கொசுக்கள், மண் ஈக்கள் மற்றும் நத்தைகள் போன்ற பல்வேறு பூச்சிகள் நோய்கள் உண்டாக்கும் ஒட்டுண்ணிகளை பரவ செய்துவிடுகின்றன. இதனை 2014க்குள் கட்டுக்குள் கொண்டுவர தீர்மானம் மேற்கொண்டுள்ளனர்.
உலகம் முழுவதும் ஆண்டுக்கு சராசரியாக 660,000 பேர் மலேரியாவால் இறக்கின்றனர். அத்துடன் டெங்கு காய்ச்சல், நிணநீர் யானைக்கால் நோய், சிக்கன்குனியா, மற்றும் மஞ்சள் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு காரணிகளாகவும் அமைகின்றன.
உலக சுகாதார தினம் 2014ம் ஆண்டில் பிரச்சாரத்தின் நோக்கமாக ஒட்டுண்ணிகள் மூலம் பரவும் நோய்கள் அதிகம் பரவும் பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு அந்த நோய்களிலிருந்து, பாதுகாப்பு வழங்குவதை கொண்டுள்ளது.
உறுதிமொழி
இன்றைய நவீன மயமான உலகில் தொழில்நுட்பம், வணிகம், விஞ்ஞானம் போன்றவற்றில்  சாதனைகளை படைத்துக்கொண்டிருக்கும் மனிதன் சுகாதாரத்திலும் சிறந்து விளங்க வேண்டும்.
ஆதலால் அசுத்தம் என்னும் சொல்லை அகற்றி தன்னல சுத்தம் பாராமல் பொதுநல சுத்தம் பேணி காப்போமாக....
http://www.lankasritechnology.com/page.php?cleaning

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக