தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 ஏப்ரல், 2014

உலகில் செல்வாக்குள்ள 100 பேர் பட்டியலில் இடம்பிடித்த தமிழர்!


தமிழகத்தின் மிகச்சிறிய கிராமத்தில் பிறந்தவரான அருணாச்சலம் முருகானந்தம் பத்தாம் வகுப்பு படிப்பை பாதியிலேயே நிறுத்தியவராவார். வெல்டிங் நிறுவனம் ஒன்றில் உதவியாளராக வேலை செய்த முருகானந்தத்திற்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். 

ஒரு நாள் அவர் தனது மனைவி மறைத்து மறைத்து எதையோ எடுத்து செல்வதைப் பார்த்து எதை அவர் மறைத்துக்கொண்டு செல்கிறார் எனக்கேட்ட போது இதெல்லாம் பெண்கள் சமாச்சாரம் என்று கூறியிருக்கிறார். அப்போதுதான், அவரது மனைவி மாதவிடாய் காலங்களில் நாப்கினுக்குப் பதிலாக பழைய துணியை பயன்படுத்தி வருவது புரிந்தது.

நாப்கின் விலை மிக அதிகமாக இருந்ததே இதற்கு காரணம். தமிழகம் முழுக்க உள்ள ஏழை குடும்ப பெண்களின் நிலை இது தான். எனவே, இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் முருகானந்தத்திற்கு ஏற்பட்டது. உடனடியாக இது குறித்து தீவிர தேடுதலில் ஈடுபட்டார்.

குறைவான விலையில் பெண்களுக்கு நாப்கின் தயாரிக்கும் இயந்திரத்தை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார். அவரது தீவிர முயற்சிக்கு ஒரு கட்டத்தில் நல்ல பலன் கிடைத்தது. தனது சொந்த முயற்சியில் இந்த இயந்திரத்தை உருவாக்கிய இவர் இன்று பல்வேறு நாடுகளுக்கு அதை ஏற்றுமதி செய்து சாதனை படைத்து வருகிறார்.

மேலும் தமிழகத்தில் உள்ள சுய உதவி குழு பெண்களுக்கு இந்த இயந்திரத்தை மலிவான விலையில் வழங்கி அவர்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபட்டு வருகிறார். இவரது இயந்திரத்தின் மூலம் தயாரிக்கப்படும் நாப்கின் தரமாகவும், விலை மிகக்குறைவாகவும் உள்ளது. ஏழை மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அவரது இந்த கண்டுபிடிப்பு உலகளாவிய அளவில் அவருக்கு பாராட்டுகளை குவித்துள்ளது.

தற்போது அமெரிக்காவில் உள்ள டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள தகவலில், உலகின் செல்வாக்குள்ள 100 பேர் பட்டியலில் முருகானந்தம் இடம் பிடித்துள்ளார். நாளை நமது மண்ணின் மைந்தரான முருகானந்தத் திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விருது வழங்கி சிறப்பிக்க உள்ளார்.

டைம்ஸ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், எழுத்தாளர் அருந்ததிராய் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முருகானந்தம் - நாப்கின் - டைம்ஸ் "100"
-------------------------------------------------------------------------

யார் இந்த அருணாசலம் முருகானந்தம் ! 

அட இவரு IITல படிக்கவில்லை !

அமெரிக்க போய் ஸ்டாண்ட்போர்ட் உனிவேர்சிட்டி மார்க்கெட்டிங் படிக்கவில்லை !

இயற்கை எரிவாய்வுக்கு ஆசை படவில்லை, கோர்ட்க்கு போகவில்லை !

பரம்பரை சொத்து போல, பிரதமர் பதவிக்கு ஆசை கொள்ளவில்லை !

அட பாருங்க, அந்த தத்துவா, இந்த தத்துவா பேசவில்லை !

தாத்தா தயவில் வாழும் பேரனும் இல்லை !

அட காலேஜ் கூட போகவில்லை !

ஆனா பாருங்க மனுஷன் டைம்ஸ் இதழில் உலகின் சக்தி வாய்ந்த 100 மனிதர்க்களில் அவரும் இடம் பெற்று இருக்கிறார் !

ஒரு மனுசனை உழைப்பு எந்த அளவு உயரத்துக்கு கொண்டு செல்லும் என்று அவர் ஒரு சிறந்த உதாரணம் !

கோயம்பத்தூர் பக்கத்துல இருக்கற ஒரு ஊராக பகுதியில் பிறந்து, ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே படித்த மனிதன், இந்தியா கொண்டாவில்லை என்றாலும் உலகம் கொண்டாட காரணம் !

1. நாமளுக்கு கோடி கோடியாக பணம் சம்பாரிக்கும் எண்ணம் எதுவும் இல்லைங்க, கோயம்புத்தூர்ல ஒரு இன்ஜினியரிங் கம்பெனில ஒரு laborயாக வாழ்க்கையை தொடங்கிய மனிதம், ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தியவர் ! அது அவருக்கு ராசி நம்பர் இல்லைங்க, காரணம் வறுமை!

2. மனுஷன் , ஏன் எங்க அப்பா சொத்து சேர்த்து வைக்கவில்லை, ஏன் படிக்கலைன்னு யோசிக்கமா, பெண்கள் பிரச்சனை, பெண்கள் பிரச்சனை என்று brand செய்யப்பட்ட "#மாதவிடாய்" ("#menstruation") இயற்கை பிரச்சனையை தான் மாணவி எதிர்கொள்ளும் போது அவர்கள்
பயன்படுத்தப் பழைய துணித் துண்டுகளைச் சேகரிப்பதை பார்த்த மனுஷன், இதில் மிகப்பெரிய தவறு, சுகாதாரம் சார்ந்த பிரச்னை இருப்தாக நினைத்தார்.

3. இதற்கு ஏன் மாற்று இருக்க கூடாது என்று நினைத்த முருகானந்தம், அதற்குள் ஒளிந்து இருக்கும் உலக வர்த்தகம் மற்றும் அதன் விலை சார்ந்த விசயங்களை உள்வாங்கிய போது அதில் இருக்கும் மார்க்கெட் பற்றி யோசிக்கவில்லை, ஆதனால் காசு இல்லாத நாம கிராமப்புற பெண்கள் எந்த அளவுக்கு கஷ்டபடுவாங்க அப்படின்னு யோசிச்சார் ! நாப்கின் செய்வதற்கான மூலபொருள் விலை ரூபாய் 2 என்றால் அதை 40 மடங்கு அதிகமாக மார்க்கெட் செய்யபடுகிறது யதார்த்த்த்தில் ! கொஞ்சம் யோசிச்சு பார்த்தார் எல்லோராலும் வாங்க முடியுமா என்று !

4. பழைய துணித் துண்டுகளுக்கு பதிலாக, அதற்கு மாற்றாக அவர் ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடித்த "நாப்கின்களை" கோடி கோடியாக இன்வெஸ்ட் பண்ணி டெஸ்ட் பண்ண வாய்ப்பு இல்லாத முருகானந்தம், தான் மனைவி, தங்கள் குடுப்பம் சார்ந்த பெண்க்கள் இடம் உதவி கேட்கும் போது அவரை பைத்தியம் என்று நினைத்தார்கள் ! அவர் அறையில் பெண்கள் சார்ந்த பொருள் இருந்த போது அவங்க அம்மா பைத்தியம் என்றே முடிவு செய்துவிட்டார்கள் ! வீட்டை விட்டு வெளியே தள்ளப்பட்ட சூழ்நிலை, மனிதன் அசரவில்லை !

5. மெடிக்கல் காலேஜ் பெண்களிடம் உதவி கேக்கலாம் என்றால், மிகுத்த போராட்டத்துக்கு பிறகு அவர்கள் உதவ முன்வந்தார்கள், மனுஷன் ஒரு stageல விலகுகளின் ரத்த்த்தை வைத்து ஒரு bladder மூலம் தனக்கு தானே "#நாப்கின்" மாட்டி சோதனை செய்த சாதனை மனிதன்! இந்த உழைப்பு, இந்த வெறி அவருக்கு ஒரு பெரிய மாற்றத்தை கொடுத்த்து !

6. அவர் பட்ட கஷ்டத்துக்கு ஒரு பிரேக் through கிடைத்த்து,
#மரச்சக்கை ஒரு மாற்று பொருளாக கண்டுபிடித்தவர், அவர் நினைத்த்தை போலவே, அது ஒரு அற்புதமான மாற்றாக அமைத்த்து/// நாப்கின் செய்ய தேவையான இந்திரங்களை குறைந்த செலவில் கண்டுபிடித்து அதை இப்போது ஜெயஸ்ரீ industries என்ற பெயரில் இலவசமாக, கிராமப்புற பெண்களுக்கு கொடுத்து அவர்களுக்கு வேலைவாய்ப்பும் கொடுக்கும் ஒப்படற மனிதர் ! அவர் தயாரிக்கும் நாப்கிங்களின் அடக்கவிலை ஒரு நாப்கின் ஒரு ரூபாய் !

அருணாசலம் முருகானந்தம் இந்த மனிதனை வளைத்து போட்டு காசு பண்ண நினைக்கும் corporate சக்திகள் அதிகம், ஆனா பாருங்க என் உழைப்பு விற்பனைக்கு இல்லை என்று சொல்லிவிட்டு, மகளிர் தன்னுதவிக் குழுக்களுக்கு வழங்கி வருகிறார்.

இப்போது 21 வெளிநாடுகளுக்கும், இந்தியாவின் பல கிராமங்களும் எந்த வணிக நோக்கமும் இல்லாமல் அடிப்படை

IIT மெட்ராஸ் இவருக்கு சிறந்த சுமூக கண்டுபிடிப்புக்கான விருதை கொடுத்த்து ! இன்னும் பல விருதுகள் !

https://www.youtube.com/watch?v=V4_MeS6SOwkஇந்த விடியோவை மறக்காமல் பார்க்கவும் ! யதார்த்தை மொத்தமா குத்தகைக்கு எடுத்த மனிதராக நான் பார்கிறேன் !

பணம் வாங்கி கொண்டு விளையாடும் வீர்கள், அரசியல் லாபி மூலம் பத்மாஸ்ரீ, பத்மாவிபூஷன் விருதுகளை வாங்கும் இந்த இந்தியா திருநாட்டில் எங்க ஊரு மனுஷன் செய்த இந்த சாதனைக்கு விருது தர சொல்லி கையேந்தவில்லை, அந்த விருதுக்கு மனசாட்சி இருந்தால் அதுவே தானாக வரும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன் !

அற்புதமான மனிதர்கள் பிறப்பது இல்லை, நம்முடன் நம்மை சுற்றி வாழ்த்து கொன்று இருக்கிறார்கள் !

அருணாசலம் முருகானந்தம் அவர்களை பாராட்ட நினைக்கும் அன்பர்கள் இந்த நம்பர்ல தொடர்பு கொள்ளலாம் : 9442224069 ( தமிழ் தினசரி ஒன்றில் வந்தது !

பெருமையாக ! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக