கோவில்களில் சிவாலய வழிபாட்டில், நாம் நிறைவாகப் பதிவு செய்து கொண்டு வர வேண்டிய இடம் சண்டிகேஸ்வரர் சன்னிதி ஆகும். இந்த சன்னிதியில் பலரும் கைகளை தட்டியும், சொடுக்கு போட்டும் வழிபடுவதை நாம் பார்க்க முடியும்.
அவர் இருபத்தி நான்கு மணி நேரமும் சிவ பூஜையிலேயே கவனத்தைச் செலுத்தி யோக நிலையில் அமர்ந்திருப்பதால், பக்தர்கள் கைத் தாளமிடுவதும், விரல்களைச் சொடுக்குவதுமாக இருக்கிறார்கள். சிவன் சொத்துக்களில் நாம் எதையும் கொண்டு செல்லவில்லை (விபூதி உள்பட) என்பதை நிரூபணம் செய்வதற்காகத் தான் கைதட்டுவதாகக் கவியரசு கண்ணதாசன் சொல்வார்.
அதுதான் உண்மையும் கூட. சண்டிகேஸ்வரர் சன்னிதியில் தங்கள் ஆடைகளில் இருந்து நூல் எடுத்துப் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இது அறியாமை ஆகும். அவருடைய சன்னிதியில் நாம் அவரை வழிபட்டு, சிவதரிசனத்தின் முழுப்பலனையும் தரும்படி சொல்லித் தரிசிக்க வேண்டும்.
மூலஸ்தானத்தில் இறைவனுக்கு சாத்திய மாலையும், நைவேத்தியத்தின் மிச்சமுமே இவருடைய பூஜைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. கடவுளின் முழு அருளையும் பெற்ற இவருடைய சன்னிதியில் மூன்று முறை மெதுவான சப்தத்துடன் கைதட்டி வழிபட்டு வந்தால் வரம் நிச்சயமாகக் கிடைக்கும். நாம் கோவில் வழிபாடு செய்வதையும் பதிவு செய்து கொள்வார்.

http://
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக