தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

ஆரோக்கியம் வேண்டுமா? இந்த பழத்தை சாப்பிடுங்கள் [!!

ஆரோக்கியமான வாழ்வை விரும்புவது மட்டுமல்லாமல் ஆரோக்கியமான உணவுகளையும் உண்ண வேண்டும்.
நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சிகளை செய்வது என்று சில ஆரோக்கியமான விடயங்களை கடைபிடிக்க வேண்டும்.
குறிப்பாக கோடையில் உடலை குளிர்ச்சியுடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் வாங்கி வந்து சாப்பிடுவார்கள்.
ஏனென்றால் கோடையில் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நீர்ச்சத்தானது அதிக அளவில் தேவைப்படும். மேலும் புரோட்டீன், வைட்டமின் போன்றவைகளும் அதிகம் தேவைப்படுவதால், அத்தகைய சத்துக்கள் நிறைந்த உணவுப்பொருட்களை அன்றாடம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
காய்கறிகளை சாப்பிட முடியாவிட்டாலும், கோடையில் அத்தகைய சத்துக்கள் நிறைந்த பழங்களையாவது சாப்பிட வேண்டும்.
இதோ ஆரோக்கியத்துடன், குளிர்ச்சி தரும் பழங்கள் உங்களுக்காக,
வாழைப்பழம்
வாழைப்பழம் எப்போதுமே எனர்ஜியை அதிகம் உள்ளடக்கிய பழங்களில் ஒன்று. எனவே இத்தகைய வாழைப்பழத்தை தினமும் இரண்டு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
தர்பூசணி
தர்பூசணியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிக அளவில் உள்ளது. இவை இதய நோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டவை. எனவே இதனையும் கோடையில் தினமும் சாப்பிட்டு வருவது நல்லது.
ஆரஞ்சு
நீரிழிவு நோய் இருந்தால், ஆரஞ்சு பழத்தை தினமும் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இவை சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, போதிய இன்சுலினை சுரக்கச் செய்யும்.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரியை ஜூஸாகவோ அல்லது அப்படியே சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின்கள் வயிற்றில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும்.
கொய்யாப்பழம்
இவை உடலில் உள்ள யூரிக் ஆசிட்டின் அளவை சிறுநீரின் வழியே வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.
திராட்சை
தைராய்டு உள்ளவர்கள், தினமும் திராட்சையை சாப்பிடுவது நல்லது. ஏனெனில் இவை தைராய்டு சுரப்பியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
செர்ரி
செர்ரியை தினமும் சாப்பிட்டு வந்தால், அவை ஆர்த்ரிடிஸ் பிரச்சனை வராமல் தடுக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக