தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 ஏப்ரல், 2014

தத்துவங்கள் 96


{ஆன்ம தத்துவங்கள் -24
உடலின் வாசல்கள் -9
தாதுக்கள் -7
மண்டலங்கள் -3
குணங்கள் -3
மலங்கள் -3
வியாதிகள் -3
விகாரங்கள் -8
ஆதாரங்கள் -6
வாயுக்கள் -10
நாடிகள் -10
அவத்தைகள் -5
ஐவுடம்புகள் -5}

தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
தத்துவா தீதமேல் நிலையில்
சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே. - - (அருட்பெருஞ்சோதி அட்டகம் )

ஆன்ம தத்துவங்கள் 24

ஆன்ம தத்துவங்கள் 24ம் ஐந்து பிரிவுகளை உடையது. அவை,
பூதங்கள் - 5 (நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு)
ஞானேந்திரியங்கள் -5 (மெய்,வாய்,கண்,மூக்கு,செவி)
கர்மேந்திரியங்கள் -5 (வாய்,கை,கால்,மலவாய்,கருவாய்)
தன்மாத்திரைகள் -5 (சுவை,ஒளி,ஊறு,ஓசை,நாற்றம்)
அந்தக்கரணங்கள் -4 ((மனம்,அறிவு,நினைவு,முனைப்பு)

பூதங்கள் 5

நிலம் உலகம் (மண்) மனிதன் (எலும்பு,மாமிசம்,தோல்,நரம்பு,உரோமம்)
நீர் உலகம் (நீர்) மனிதன் (உமிழ்நீர்,சிறுநீர்,வியர்வை,இரத்தம்,விந்து,)
காற்று உலகம் (வாயு) மனிதன் (சுவாசம்,வாயு)
ஆகாயம் உலகம் (வானம்) மனிதன் (வான் போல பரந்து விரிந்த மூளை)
நெருப்பு உலகம் (சூரியஒளி)மனிதன்(பசி,தூக்கம்,தாகம்,உடலுறவு,அழுகையின்போது உடல்வெப்பம் அதிகரிக்கும்)

ஞானேந்திரியங்கள் 5

மெய்(உடம்பு) காற்றின் அம்சமாதலால் குளிர்ச்சி,வெப்பம்,மென்மை,வன்மை அறியும்
வாய்(நாக்கு) நீரின் அம்சமாதலால் உப்பு,புளிப்பு.இனிப்பு,கைப்பு,கார்ப்பு,துவர்ப்பு என அறுசுவையறியும்
கண் நெருப்பின் அம்சமாதலால் நிறம்,நீளம் உயரம்,குட்டை,பருமன்,மெலிவு என பத்து தன்மையறியும்
மூக்கு மண்ணின் அம்சமாதலால் வாசனை அறியும்
செவி வானின் அம்சமாதலால் ஓசையறியும்

கர்மேந்திரியங்கள் 5

வாய் (செயல்) சொல்வது
கை (செயல்) கொடுக்கல்,வாங்கல்,பிடித்தல்,ஏற்றல்
கால் (செயல்) நிற்றல்,நடத்தல்,அமர்தல்,எழுதல்
மலவாய் (செயல்) மலநீரை வெளியே தள்ளுதல்
கருவாய் (செயல்) விந்தையும்,சுரோணிதத்தையும்,சிறுநீரையும் வெளியேத் தள்ளும்

தன்மாத்திரைகள் 5

சுவை சுவையறிதல்
ஒளி உருவமறியும்
ஊறு உணர்வறியும்
ஓசை ஓசையறியும்
நாற்றம் மணமறியும்
அந்தக்கரணங்கள் 4
மனம் - காற்றின் தன்மை அலைந்துதிரியும்
அறிவு - நெருப்பின் தன்மை நன்மை தீமையறியும்
நினைவு - நீரின் தன்மை ஐம்புலன் வழியே இழுத்துச் செல்லும்
முனைப்பு - மண்ணின்தன்மை புண்ணிய பாவங்களைச் செய்யவல்லது.

உடலில் வாசல்கள் 9

கண்கள்-2
செவிகள் -2
முக்குத்துவாரங்கள் -2
வாய் -1
மலவாயில் -1
குறிவாசல் -1
தாதுக்கள் 7
சாரம் - (இரசம்)
செந்நீர் (இரத்தம்)
ஊன் (மாமிசம்)
கொழுப்பு
எலும்பு
மூளை
வெண்ணீர் (விந்து,சுரோணிதம்)

மண்டலங்கள் 3

அக்னி மண்டலம்
ஞாயிறு மண்டலம்
திங்கள் மண்டலம்

குணங்கள் 3

மனஎழுச்சி (களிப்பு,அகங்காரம்,போகம்,வீரம்,ஈகை)
மயக்கம் (பற்று,தூக்கம்,சம்போகம்,திருட்டு,மோகம்,கோபம்)
நன்மை (வாய்மை,கருணை,பொய்யாமை,கொல்லாமை,அன்பு,அடக்கம்)

மலங்கள் 3

ஆணவம் (நான் என்ற மமதை)
மாயை (பொருட்களின் மீது பற்று வைத்து அபகரித்தல்)
வினை (ஆணவம்,மாயையினால் வரும் விளைவு)

பிணிகள் 3

வாதம்
பித்தம்
கபம்

விகாரங்கள் 8

ஆசை
வெகுளி
கருமித்தனம்
மயக்கம்
வெறி
பொறாமை
ஈறிசை (தான்படும் துன்பம் பிறரும்படவேண்டும் என எண்ணுவது)

ஆதாரங்கள் 6

மூலம்
தொப்புள்
மேல்வயிறு
நெஞ்சம்
கழுத்து புருவநடு
டம்பம் (தற்பெருமை)
வாயுக்கள் 10
உயிர்க்காற்று
மலக்காற்று
தொழிற்காற்று
ஒலிக்காற்று
நிரவுக்காற்று
விழிக்காற்று
இமைக்காற்று
தும்மல்காற்று
கொட்டாவிக்காற்று
வீங்கல்காற்று

நாடிகள் 10

சந்திரநாடி அல்லது பெண்நாடி
சூரியநாடி அல்லது ஆண்நாடி
நடுமூச்சு நாடி
உள்நாக்கு நரம்புநாடி
வலக்கண் நரம்புநாடி
இடக்கண் நரம்புநாடி
வலச்செவி நரம்புநாடி
இடதுசெவி நரம்புநாடி
கருவாய் நரம்புநாடி
மலவாய் நரம்புநாடி

அவத்தைகள் 5

நனவு (ஐம்புலன் வழி அறியப்படும்)
கனவு
உறக்கம் (சொல்லப்புலப்படாத நித்திரைநிலை)
பேருறக்கம் (மூர்ச்சையடைதல்)
உயிர்அடக்கம் (கோமா,ஆழ்மயக்கநிலை)

ஐவுடம்புகள் 5

பருஉடல்
வளியுடல்
அறிவுடல்
மனஉடல்
இன்பஉடல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக