தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, April 30, 2014

கவலையை மறக்க செய்யும் தூக்கம் வேண்டுமா?


காலை ஆரம்பித்ததிலிருந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரை மனிதன் ஏராளமான பிரச்சனைகளை அந்நாளில் எதிர்கொள்கிறான்.
இந்த கவலைகளையெல்லாம் நம்மை மறக்கச் செய்வது இரவு நேர தூக்கம் மட்டுமே. ஆனால் இந்து தூக்கத்தை கூட பெரும்பாலோனோர் தொலைத்துவிட்டு தேடி அலைகின்றனர்.
இப்படி தூக்கத்தை தொலைத்து தேடுவதற்கு முக்கிய காரணம், மன அழுத்தம் தான். இதனால் இரவில் கூட நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியவில்லை.
மன அழுத்தத்தைப் போக்கி, இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதற்கான வழிகளைத் தேட வேண்டும். இங்கு ஒருசில வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தூங்கும் முன் ஒரு குளியல்
இரவு தூங்கும் முன் சுடுநீர் அல்லது குளிர்ந்த நீரில் ஒரு குளியல் போடுங்கள். இதனால் மனம் அமைதியடைந்து, உடலுக்கு மசாஜ் செய்தது போல் இருக்கும். இதன் மூலம் இரவில் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.
2 மணி நேரத்திற்கு முன்னரே சாப்பிடுங்கள்
மன அழுத்தத்தில் இருக்கும் போது இரவில் தூங்குவதற்கு 2 மணிநேரத்திற்கு முன்பே சாப்பிடுங்கள். ஏனெனில் தூங்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு சாப்பிடுவதாக இருந்தால், அவசரமாக சாப்பிடுவோம்.
இதனால் உணவானது செரிமானமடையாமல், தூக்கத்தைக் கெடுக்கும். எனவே முன்பே சாப்பிட்டுவிடுங்கள்.
தொலைக்காட்சி பார்ப்பதை குறையுங்கள்
மன அழுத்தத்தில் இருக்கும் போது தொலைக்காட்சி பார்த்தால் மட்டும் அழுத்தம் குறைந்துவிடப் போவதில்லை. ஒருவேளை பார்த்தால் சரியாவது போல் இருந்தால், அது தற்காலிகமாக தான் இருக்குமே தவிர, தொலைக்காட்சியை அணைத்த பின்னர் மீண்டும் மனம் அழுத்தத்திற்கு உள்ளாகும். எனவே மன அழுத்தத்தில் இருக்கும் போது தூங்குவதற்கு முயலுங்கள்.
மனம் விட்டு பேசுங்கள்
மனம் கஷ்டமாக ஒருவித அழுத்தத்தில் இருக்கும் போது, மனதிற்கு பிடித்தவரிடம் மனம் விட்டு பேசுங்கள். இதனால் உங்களின் மனம் இதமாகி, பின் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
சுத்தமான காற்றை சுவாசியுங்கள்
எப்போதும் ஏசி அறையிலேயே இல்லாமல், சற்று காற்றோட்டமாக வெளியே சிறிது தூரம் நடந்து வாருங்கள். இதனால் நல்ல சுத்தமான காற்றினை சுவாசிப்பதுடன், அந்த சுத்தமான காற்றானது மூளையை அமைதிப்படுத்தும்.
வேலையை படுக்கை அறைக்கு கொண்டு செல்லாதீர்கள்
எக்காரணம் கொண்டும் படுக்கை அறை வரை வேலையை எடுத்து செல்ல வேண்டாம். படுக்கை அறையான ஓய்வு எடுப்பதற்காகவே தவிர வேலை செய்வதற்காக அல்ல. எனவே தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, படுக்கை அறையில் துணையுடன் சந்தோஷமாக ரொமான்ஸ் செய்யுங்கள். இப்படி ரொமான்ஸ் செய்தால் மனம் லேசாகிவிடும்.

No comments:

Post a Comment