இயற்கையிலேயே பல்வேறு சத்துக்ளை கொண்ட கற்றாழையை பொதுவாக அழுத்த நிவாரணி என்று அழைக்கிறோம்.
இயற்கை சத்துக்களான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அடங்கியுள்ள கற்றாழை, உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
மேலும் கற்றாழையை சாறு செய்தும் குடிக்கலாம். கற்றாழைச் சாறு போதையை நீக்க உதவுகிறது.
கற்றாழையை கழுவி அதன் தோல் நீக்கி குழம்பு வைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் போகும். கடும் வயிற்றுப்புண்ணுக்கு கற்றாழை இலையின் சாறு பயன்படுகிறது அதோடு வயிற்றில் உள்ள நாக்குப் பூச்சிகளையும் வெளியேற்றுகிறது.
மேலும் கற்றாழை முக அழகு சாதனங்கள் தயாரிப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.
இதன் ஜெல் போன்ற பகுதியை பதப்படுத்தி குளிர்பானம் தயாரிக்கலாம்.
கற்றாழையின் வேறை அவித்து, உலர்த்திப் பொடி செய்து, 15 மில்லி பாலுடன் கொடுக்க சூட்டு நோய்கள் தீரும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக