தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 ஏப்ரல், 2014

'அனைவரின் சிறந்த ஆசான்' உலக புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் இன்றாகும்.( அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துக்கள் )


ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் திகதி உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினமாக (WORLD BOOK AND COPYRIGHT DAY) கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஓர் அங்கமான யுனெஸ்கோ சார்பில் 1996, ஏப்ரல் 23-ம் திகதி ஜெனிவாவில் உலகப் பதிப்பாளர்கள் மாநாடு நடந்தது. அப்போது ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் திகதியன்று 'உலகப் புத்தக தினம்’ கொண்டாட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஏப்ரல் 23-ம் திகதி ஆங்கில நாடக இலக்கிய மேதையான ஷேக்ஸ்பியர் பிறந்த நாள். அவரை போற்றும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது.
புத்தகங்களின் அவசியத்தை அனைவரும் அறிந்துக்கொள்ள ஐந்து விதமான நடைமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என யுனெஸ்கோ சொல்லியுள்ளது.
1. பதிப்பகங்கள்
பதிப்பகங்கள் புத்தக கண்காட்சிகளை நடத்த வேண்டும். மலிவான விலையில் புத்தகங்களை வெளியிட வேண்டும். மாணவர்கள், நோயாளிகள் மற்றும் கைதிகளுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்க வேண்டும்.
2. தொழிலதிபர்கள்
புத்தக தினத்தன்று பணியாளர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் தொழிலதிபர்கள் பரிசளிப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். தொழிற்சாலையில் சிறு நூலகங்களைத் தொடங்கி, பணியாளர்களை படிப்பாளர்களாக மாற்ற வேண்டும். கல்வி அறிவு விழிப்புணர்வு கூட்டத்தை நடத்த வேண்டும்.
3. நூலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்
சிறுவர் சிறுமியர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த அவர்களுக்கு நூலகங்களும் கல்வி நிறுவனங்களும் போட்டிகள் வைக்க வேண்டும். மேலும், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும். இளம் எழுத்தாளர்களிடையே போட்டி நடத்த வேண்டும்.
4. பொதுமக்கள்
நூலகத்திற்கு சென்று பொதுமக்கள் புத்தகங்களை படிக்க வேண்டும். வீட்டுக்கொரு சிறிய நூலகத்தை ஆரம்பிக்க வேண்டும். நண்பர்கள், உறவினர்கள், அன்பானவர்களுக்கு நூலை பரிசளிப்பதை வழக்கமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
5. பத்திரிகைகள்
புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தைத் தூண்டும் விதத்தில் வாசகர்களை பத்திரிகைகள் ஊக்கப்படுத்தவேண்டும்.
புத்தக தினத்துக்காக யுனெஸ்கோ ஒரு பொன்மொழியையும் வெளியிட்டு உள்ளது. 'நீங்கள் நேசிக்கும் ஒருவருக்கு உளமார ஒரு புத்தகம் பரிசளியுங்கள்’ என்பதே அது.
தமிழரிடையே நூல் வாசிப்புத் திறன் முற்றிலும் குறைந்துவிட்டது என ஒரேயடியாகக் கூறிவிட முடியாது. ஏனெனில், 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நாளிதழ்கள், வார இதழ்கள், இருவார இதழ்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை இப்போது பத்து மடங்குக்கு மேல் பெருகியுள்ளது. வாசிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. இது பாராட்டத்தக்க விஷயமாகும்.
அதே நேரத்தில், தமிழரிடையே நூல் வாசிப்புத் திறன் முற்றிலும் குறைந்துவிட்டது என ஒரேயடியாகக் கூறிவிட முடியாது. ஏனெனில், 15 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான நாளிதழ்கள், வார இதழ்கள், இருவார இதழ்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை இப்போது பத்து மடங்குக்கு மேல் பெருகியுள்ளது. வாசிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. இது பாராட்டத்தக்க விஷயமாகும்.
யுனெஸ்கோ உலக மக்களின் வாசிப்பு அளவை கணக்கிட்டது. அது உலக மக்களின் சராசரி வாசிப்பு ஆண்டுக்கு 150 பக்கங்கள்
பெரும்பாலும் எந்த ஒரு புத்தகமும், இரு பதிப்புக்கு மேல் வெளியிடப்படுவது என்பது அரிதாக இருக்கிறது. புத்தகம் வாங்கும் மற்றும் படிக்கும் ஆர்வம் போதிய அளவுக்கு இல்லாததால் மறுபதிப்புகள் வெளியாவதில்லை.
நல்ல புத்தகத்தை சிறந்த ஆசான் எனலாம்.
************************************
புத்தகங்கள் பற்றிய சுவைகள்:
***********************
புத்தகங்கள் ஒருவரின் கற்பனைத்திறன் வளரப் பயன்படுகின்றன.
புத்தகங்கள் படிக்கும் போது மகிழ்ச்சி, சோகம், ஆனந்தம் போன்ற பல்வேறு உணர்வுகள் நமக்கு ஒரு சேர ஏற்படுகின்றன.
புத்தகங்கள் நம்மைத் அவற்றின் காலத்திற்கு இட்டுச் செல்கின்றன.
மாவீரன் நெப்போலியன் போர்க்களத்திற்குக் கூட புத்தகங்களை எடுத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
**அனைவருக்கும் உலக புத்தக தின வாழ்த்துக்கள்**


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக