தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 ஏப்ரல், 2014

நிறம் மாறும் பச்சோந்திகள்


ஓணான்போல் பச்சை நிறத்தில் காணப்படும் பச்சோந்திக்கு அப்பெயர் வரக் காரணமே அதன் பச்சை நிறம் தான்.
இலைகளுக்கு மத்தியில் தன்னை மறைத்து கொள்ளவும், எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும் பச்சோந்தி தனது நிறத்தை மாற்றிக் கொள்ளும் என்பதும் தெரிந்த விஷயம்.
சில தெரியாத விஷயங்களும் இருக்கின்றன, அதில் முக்கியமானது பழுப்பு, சிவப்பு, மஞ்சள், வெள்ளை, நீலம், கறுப்பு அல்லது இவைகளுள் ஏதாவது ஒரு நிறத்தை கொண்டு தங்களின் நிறத்தை சூழ்நிலைக்கு ஏற்ப பச்சோந்திகள் மாற்றிக் கொள்கின்றன.
எனினும் பெரும்பாலான நேரங்களில் பச்சோந்திகள் தங்களின் நிறத்தை பச்சை நிறத்தில் மாற்றிக் கொள்கின்றன.
பச்சோந்தி இனத்தில் மொத்தம் 100 வகை உண்டு, இவற்றில் 59 பச்சோந்தி இனங்கள் மடகாஸ்கர் தீவில் இருக்கின்றன.
தனது உடலின் நீளத்தை போல் மூன்று மடங்கு நீளநாக்கை கொண்ட பச்சோந்தி லபக்கென்று இரையை நாக்கில் சுருட்டி பிடித்துக் கொள்கிறது.
இப்படி நாக்கில் ஒட்டிய இரை கீழே விழுவதே கிடையாது, காரணம் அதன் நாக்கில் சுரக்கும் கெட்டியான பசை போன்ற திரவமாகும்.
பச்சோந்தியின் இரண்டு கண்களும் ஒரே நேரத்தில் வெவ்வேறு திசைகளில் பார்க்க கூடியவை.
ஓணானை போல மரத்தை விட்டு நிலத்திற்கு வருவதில்லை, அப்படி இறங்கி வந்தால் தனது எதிரிக்கு இரையாகிவிடுவோம் என்பதை அவை உணர்ந்தே இருக்கின்றன.

எப்படி பச்சோந்திகளால் இப்படிப்பட்ட வெவ்வேறு நிறங்களுக்கு மாற விடுகிறது?
இதன் தோல் பகுதியில் பல்வேறு விதமான நிறமிகள் உண்டு, இதுதான் பச்சோந்தியின் உடல் பலவிதமாக மாறுவதற்கு உதவுகின்றது.
கறுப்பு நிறமான இந்த நிறமியில் “மெலனோபோர்ஸ்” என்னும் அணுக்கள் காணப்படுகின்றன.
இந்த நிறமி மெலனோபோர்சுடன் கலக்கும் போது வெவ்வேறு நிறங்கள் தோன்றுகின்றன.
குறிப்பாக பச்சோந்திகள் வேகமாக நடக்கும் போதும், சூழ்நிலைக்கேற்ப தங்களை மறைத்து கொள்ளும் போதும் இந்த நிறமாற்றம் வேகமாக நடைபெறுகிறது.
தவிர, இவற்றின் நரம்பு மண்டலங்களும் நிறமாற்றத்திற்கு உதவுகின்றன.
மேலும் தனது இணையை கவர்வதற்காகவும், ஆண் பச்சோந்தி தனது நிறத்தை மாற்றிக் கொள்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக