தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 ஏப்ரல், 2014

ஆண்கள் ஏமாற்றும் போது என்ன பொய் சொல்வார்கள்?

திருமண பந்தத்தில் இணையும் ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்க்கையை இல்லறேமே நல்லறமாய் ஆரம்பிக்கின்றனர்.
நன்றாக போய்க்கொண்டிருக்கும் இவர்கள் வாழ்க்கைக்கு அடையாளமாக குழந்தை பெற்றுக்கொள்கின்றனர்.
பின்னர் நாளடைவில் சில தம்பதியினர் தங்கள் வாழ்க்கையை இனிதே நடத்துகின்றனர், ஆனால் ஒரு சில தம்பதியினர் தடம் மாறிப்போகின்றனர்.
இவ்வாறு தடம் மாறும்போது இவர்களின் வாழ்க்கையில் பொய்யான வார்த்தைகளே அதிகம் பயணிக்கின்றன. இந்த விடயத்தில் பெண்கள், ஆண்களிடம் பொய் சொல்வதை விட, ஆண்களே ஏராளமான பொய்களை சொல்வார்கள்.
சில பெண்கள் கணவன் மேல் கொண்ட அளவுகடந்த நம்பிக்கையாலும், பாசத்தாலும் இதனை அப்படியே நம்பிவிடுவார்கள், ஆனால் ஒரு சில பெண்கள் இந்த பொய் வார்த்தைகளால் ஒரு பிரளயத்தையே வீட்டில் உருவாக்கிவிடுவார்கள்.
இவ்வாறு ஆண்கள் பொய் சொல்லும்போது எந்தெந்த பொய்களை தங்கள் மனைவியிடம் தெரிவிப்பார்கள் என்பதை பார்ப்போம்.
அவள் எனது தோழி
உங்கள் கணவன் புதிதாக ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை நீங்கள் அறிகிறீர்கள்.
நீங்களாக கண்டுபிடிப்பதற்கு முன்பாக அவர் உங்களிடம் அதனை பற்றி எதையும் தெரிவிக்காமல், நீங்கள் கண்டு பிடித்து, அந்த பெண்ணை சந்திக்கலாமா என்று கேட்டால் அவள் எனது தோழியே மட்டுமே என்று பொய்யாக சமாளிப்பார்.
ப்ளீஸ் என் மொபைலை தொடாதே
உங்கள் கணவனின் கைப்பேசியில் அவர் காதலி அனுப்பிய எஸ்.எம்.எஸ்-களை படிக்க கூடாது என்ற காரணத்தினால் தான் உங்களை அவர் கைப்பேசியை தொடவிடமாட்டார்.
நீ என்னை ஏமாற்றுகிறாய்?
ஏமாற்றும் ஆண்கள், தங்களின் மனைவியின் மீது அந்த பழியை சுமத்துவார்கள். ஏன்? 'நாம் ஏமாற்றும் போது, ஏன் அவள் நம்மை ஏமாற்றக் கூடாது என்ற எண்ணமே அதற்கு காரணம்.
நீ சரியில்லை
வேறொரு பெண்ணின் தொடர்பில் இருக்கும் ஆண்களின் பார்வைக்கு மனைவி எது செய்தாலும் குற்றமாக இருக்கும்.
மனைவி எது செய்தாலும் குறை கண்டுபிடித்து நீ சரியில்லை என்று முகத்திற்கு எதிரே சொல்லிவிடுவார். காரணம் அவர் விரும்பியவை வேறொரு பெண்ணிடம் இருந்து அவருக்கு கிடைக்கின்றன.
எனக்கு அலுவலகத்தில் வேலை உள்ளது
திடீரென அவருக்கு அலுவலகத்தில் அதிக வேலை வந்து விடும். எப்போதும் போல வீட்டுக்கு சரியான நேரத்தில் வர மாட்டார்.
காரணம், உண்மையிலேயே வேலைப்பளு அல்ல. மாறாக தன் காதலியை சந்திக்க சென்று விடுவார். இப்படி செய்வதால் உங்களிடம் இருந்து தப்பித்து கொள்ளலாம் அல்லவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக