தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 ஏப்ரல், 2014

ஒரே ஒருநாள் மட்டும் விற்பனை செய்யப்பட்ட கூகுள் கிளாஸ் !

தொழில்நுட்ப உலகில் புதிய புரட்சியை ஏற்படுத்திய கூகுள் கிளாஸ் தன்னகத்தே பல்வேறு திறன்களை கொண்டதாக வடிவமைக்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.
பார்க்க சாதாரணமான கண்ணாடியாக தோன்றினாலும், உலகைச் சுற்றி வர ஏதுவான வசதி பெற்றுள்ள இதில் எப்போது வேண்டுமானாலும் மின்னஞ்சல், டுவிட்டர் என அனைத்து இணையதளத்திலும் இணைந்திருக்க உதவியாக இணையத்துடன் இதன் வலப்பக்கம் சிறிய திரையையும் பெற்றுள்ளது.
எனினும் நீண்ட காலமாக பொதுமக்களின் பாவனைக்காகவும், பொது நோக்கத்திற்காகவும் இச்சாதனம் விற்பனை செய்யப்படவில்லை.
ஆனால் நேற்றைய தினம் மட்டும் இச்சாதனம் பொது நோக்கத்திற்காகவும், பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
இதன் விலையானது 1500 டொலர்களாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக