தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 ஏப்ரல், 2014

வரி வரியாய் நார்ச்சத்து கொண்ட பீர்க்கங்காய் !

பீர்க்கங்காயில் இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளதால், சந்தையில் இதற்கு கிராக்கி அதிகம்.
பீர்க்கங்காயில் குறைவான கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புச் சத்து உள்ளது.
இதில் நன்மை தரும் நார்ச்சத்து, வைட்டமின் சி, ரைபோபிளேவின், துத்தநாக சத்து, இரும்பு சத்து மற்றும் மெக்னீசியம் உள்ளது.ரத்தத்தை சுத்தகரிக்கும் தன்மை உள்ளது.
இதில் உள்ள இயற்கை சத்துக்கள் ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கிறது. பீர்க்கங்காயில் உள்ள பீட்டா குரோடீன் கண் பார்வைக்கு ஊட்டம் தரும்.
இதில் உள்ள செல்லுலோஸ் மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றை சீராக வைக்கும். பித்தப்பையை சுத்தப்படுத்தி, உடலில் ஆல்கஹால் இருந்தால் அதன் நச்சு முறிக்கும் அருமருந்து. உடல் எடையை குறைக்க உதவும்.
தோல் வியாதிகளான சோரியாஸிஸ் மற்றும் எக்ஸீமா ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது.
பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும், உடலுக்கு உரம் ஏற்றும். இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும்.
வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும். பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும்.
பீர்க்கங்காயை சீவியெடுக்கும் தோலை துவையல் செய்து சாப்பிடுவதும் உண்டு. இந்த துவையல் நாக்கின் ருசியற்ற தன்மையைப் போக்கி ஜீரண சக்தியை அதிகமாக்கும்.
சிறிது உஷ்ணத்தையும் கொடுக்கும். ஆனால் வாத உடம்புக்காரர்களுக்கு இது பொருத்த மானதாக இருக்காது. அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு சிறந்தது.
பீர்க்காங்காயை அதிகமாக சாப்பிட்டால் மந்தம் உண்டாகும். அதனால் ஏற்படும் தீமைகளுக்கு கரம் மசாலாவும், நெய்யும் மாற்றாக அமையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக