தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 17 ஏப்ரல், 2014

தேவ பாசையும் தேவ நாகரி எழுத்தும் ,,,,,,,


ஆனைக்கும் அடி சறுக்கும் என்பதையும் பூனைக்கும் மதில் சறுக்கும் என்பதையும் பல சந்தர்பங்களில் பார்த்தும் அறிந்தும் இருக்கின்றேன்.நீச்சலில் மீனுக்கும் மூச்சடைக்கும் என்பதை முதன் முதலாக கேள்விபட்ட பொழுது அதிர்ச்சி அடைந்தேன் .ஆனால் உண்மை என்பதை உணர்ந்த பொழுது தோல்வி காணாதவர்களும் தவறு செய்யாதவர்களும் இந்த உலகில் இல்லை என்ற முடிவுக்குவந்தேன்.

மனைவி பிள்ளை விடயத்தில் புத்தரும்,வர்க்க வேறுபாட்டு விடயத்தில் நாவலரும்,பிள்ளைகளை வளர்க்கும் விடயத்தில் காந்தியும்,தமிழனை இகழ்ந்து எழுதிய விடயத்தில் கம்பரும் பெரும் தவறுகள் செய்தவர்கள்தான்.ஆனால் உலகம் அவர்கள் பெயர்களை உச்சரிக்கும் விதத்தில் சில நல்ல விடயங்களை செய்து வரலாற்றில் தங்கள் பெயர்களை என்றும் நிலைக்கும் வகையில் தடம்பதித்து சென்று இருக்கின்றார்கள்.இவை எல்லாம் தனிநபர்கள் செய்த தவறும் அவர்கள் சார்ந்த விடயங்களும் ஆனால் நான் இன்று எழுத போகும் விடயம் ஒரு இனமே செய்த பெரும் தவறான விடயம் .

அதாவது உலகிற்கு நாகரீகத்தை கற்றுகொடுத்த எம் முன்னோர்களான நாகர்கள் கண்டு பிடித்த நாகரி என்ற தமிழனின் புராதன எழுத்தை நாம் அன்னியனுக்கு விட்டு கொடுத்ததுதான் அந்த விடயம் .விட்டு கொடுத்ததுதான் கொடுத்துவிட்டோம் .இன்று அதை வட மொழி எழுத்து என்று சொல்லி சொல்லி தமிழ் குழந்தை படிப்பதற்கோ எழுதுவதற்கோ தொடர்ந்தும் தடை விதித்துவருகின்றோம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை இந்த நாகரி எழுத்தை எல்லோரும் பாவிக்காவிட்டாலும் நாகர்கள் வாழ்ந்த புராதன இடங்களில் ஏடுகள் எழுதுவதற்கு பயன்படுத்தி வந்திருகின்றார்கள் என்பதற்கு என்னிடம் ஒரு சாஸ்திரியின் ஏட்டு ஆதாரம் இருக்கிறது .அவர்கள் அவர்கள் வாழ்நாளில் வட நாட்டுக்கு செல்லவில்லை.அப்படியாயின் அவர்கள் இந்த எழுத்தை எங்கு கற்றார்கள்?? எங்கு கற்கவேண்டும் அவர்கள் பரம்பரை சொத்து இந்த எழுத்து அவர்கள் தாய்வழியில் கற்பிக்கபட்டுவந்த எழுத்து.

இன்று 30 வயதை தாண்டி வாழ்பவர்கள் ஒரு முறை சிந்தித்து பாருங்கள் உங்களுக்கு வித்தியா ஆரம்பம் செய்யும் பொழுது கோவில்களில் ஏடு தொடக்கப்படும் அந்த ஏடு தொடக்குபவர் உங்களுக்கு பனை ஓலையில் அமைந்த ஒரு எட்டை கையில் தருவார் அதில் ஐ போன்ற //ஐ அல்ல //ஒரு வளைந்த எழுத்தே முன்னுக்கு இருந்திருக்கும் அதற்க்கு பின்னரே ,அ ஆ இ என உயிரெழுத்துக்கள் பன்னிரண்டும் எழுதப்பட்டு அதற்க்கு பின்னர் ஆயுத எழுத்து எழுதப்பட்டு இருக்கும்.இன்று அந்த வழமை இருக்கின்றதோ அது எனக்கு சரியாக தெரியவில்லை.ஆனால் அன்று தொடக்கத்தில் இருந்த அந்த எழுத்து எம் முன்றோர்கள் உருவாக்கிய அட்சரம் தான் .அது நாகரி எழுத்துதான் .

இன்று வந்தே மாதரம் என்று இந்திய தேசிய கீதம் தேவநாகரி மொழியில் எழுத பட்டு இருக்கிறது என்று தமிழ்நாட்டுக்காரன் சண்டை பிடிக்கின்றான் .ஆனால் அவனுக்கு தெரியவில்லை அது அவனுடைய பண்டைய எழுத்து என்பது .அண்மையில் இந்திய ரூபாவுக்கு ஒரு குறியீட்டு இலண்சனை பொறிக்க ஒரு எழுத்துவடிவத்தை உருவாக்கி காட்டி தமிழன் ஒருவன் சில லட்சங்கள் பரிசு பெற்று இருக்கின்றான். அதையும் எங்கள் தமிழக அரசியல் வாதிகள் தவறென்று கூறி அந்த தமிழனை பேசுகின்றார்கள்.அவன் அதில் பொறித்தது பண்டைய நாகரி எழுத்து .

உலகில் முதல் தோன்றிய மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்த முக அசைவுகளை பயன்படுத்தினான். பின்னர் அவற்றை ஓவியமாக வரைந்து காட்டினான் .அந்த வளர்சிபாதையில் நாகரி என்ற இந்த எழுத்தை உருவாக்கி அதற்கு உச்சரிப்பை கொடுத்து தமிழ் மொழியை உருவாக்கினான்.அவ்வாறு வளர்சி அடைந்த மனிதன் உலகிற்கு நல்லொழுக்கத்தை கற்று கொடுத்தான். அதை நாகரீகம் என்ற பெயரிட்டு அழைத்து வந்தான்.தங்கள் கலை இலக்கியம் என்று அனைத்து செயல்பாடுகளிலும் நாகரி எழுத்தை பயன்படுத்தி வந்தான் பண்டைய புராணங்கள் இதிகாசங்கள் அனைத்தையும் அந்த எழுத்துகளையே ,பயன்படுத்தி எழுதி வந்தான்.கோவில்களில் சிற்பங்களில் கூட அந்த எழுத்துவகையை பொறித்துவந்தான். //அனேகமாக எமது பண்டைய இலக்கியங்கள் புராண இதிகாசங்கள் மூல பிரதி நாம் இன்று பாவிக்கும் தமிழ் கிரந்த எழுத்தில் இல்லை என்பது இதற்க்கு ஆதாரம்// .அவ்வாறு வாழ்ந்துவந்த மனிதர்களை குழப்ப வடக்கில் இருந்து ஈரானிய கணவாய்கள் வழியாக வந்த ஆரியன் முயற்சி செய்தான்.

நாகர்களின் நாகரீகத்திலும் அவர்கள் எழுத்துவடிவிலும் அவர்களின் ஏனைய வளர்ச்சிகளிலும் ஆசை கொண்டு அவற்றை கற்றுக்கொண்டு அவற்றை பின்பற்றி அவர்கள் கண்டுபிடிப்புக்களுக்கு உரிமை கோர முயற்சித்தான்.அதில் இவர்களை அடக்கி வெற்றியும் கண்டான்.எங்கள் சொத்துக்கள் பொருட்களோடு எங்கள் கண்டுபிடிப்புகளையும் தனது உடமை ஆக்கிகொண்டான்.இதில் எங்களில் சிலர் அவர்களுக்கு உதவி இருக்கலாம். ஆனால் நாம் ஒருவர் இருவரில் குறை சொல்ல முடியாது ஒட்டுமொத்த இனமே இந்த எழுத்தை அவர்களுக்கு விட்டு கொடுத்து இருக்கிறது .நாம் தான் எதையும் இலகுவாக கண்டு பிடிக்கும் ஆற்றல் உள்ளவர்களாக இருந்ததால் வேறு எழுத்துவகைகளையும் பிற்காலத்தில் கண்டு பிடித்தோம் அவ்வாறு கண்டி பிடித்தவை தான் பிராமி என்ற எழுத்துவடிவமும் தமிழ் கிரந்த எழுத்து வடிவமும் ,ஆனால் இவற்றில் இல்லாத ஒரு சிறப்பு எமது முதல் கண்டுபிடிப்பான நாகரி எழுத்தில் இருக்கிறது என்ற உண்மையை இன்றைக்கு பல ஆயிரம் ஆண்டுகள் கடந்த பின்னரும் எம்மால் மறுக்க முடியாது.

எம்மிடம் இருந்து திருடிய நாகரி எழுத்தை அந்த வடவர்கள் தங்கள் கண்டுபிடிப்பாக உலகை நம்ப வைக்க ஒரு நாடகத்தை அரங்கேற்றி அதில் சிறு மாற்றங்களை செய்து தேவ என்ற சொல்லை முன்னுக்கு சேர்த்து தேவநாகரி என்ற பெயரை இட்டு அது தேவர்களின் பாசை என்று அறிவித்துகொண்டார்கள்.அந்த எழுத்துவடிவத்தை கொண்டு சமஸ்கிரிதத்தை எழுதினார்கள்.ஆனால் இதுவரை சமஸ்கிருதத்துக்கு என்று ஒரு சொந்த எழுத்து இல்லை எங்கள் நாகரி எழுத்தை தான் தொடர்ந்தும் பாவிக்கின்றார்கள்.

சமஸ்கிருதம் மட்டும் அல்ல ஹிந்தி, மராட்டி, காஷ்மீரி, சிந்தி மற்றும் நேபாள மொழியையும் வேறு சில தெற்காசிய நாட்டு மொழிகளையும் எழுத இந்த எழுத்தையே பாவிக்கின்றார்கள்.இந்த எழுத்து 12 உயிர் எழுத்துக்களையும் 34 மெய் எழுத்துக்களையும் கொண்டது.

எமது முன்னோர்கள் எழுத்துக்களை அட்ஷரம் என்று அழைத்தார்கள்.ஷரம் என்பது அழிவடைய கூடியது.அவற்றை கோர்வை ஆக்கி வைத்தால் வரலாறுகள் அழியாது என்ற அர்த்தத்தில் அதை கோர்வையாக்கி அட்ஷரம் என்று பெயர் வைத்து அழைத்தார்கள்.எந்த எழுத்து வடிவம் அழிய கூடாது என்று நாகரி அட்ஷரம் என்று அவர்கள் பெயர் வைத்தார்கழோ,,, நாம் அந்த எழுத்துவடிவத்தை தொலைத்துவிட்டு,மறந்துவிட்டு இன்று அதை வேற்று மொழி என்று சொல்லி வாதாடி கொண்டு நிற்கின்றோம் ,,,,ஆனைக்கும் அடி சறுக்கும் ,பூனைக்கும் மதில் சறுக்கும் ,மீனுக்கும் மூச்சடைக்கும் நமக்கு நம் முன்னோர்கள் விட்டு சென்ற முதன்மை எழுத்தே மறந்து போய்விட்டது ,,,மீண்டும் எங்கள் நாகரி எழுத்தை மீட்போமா?? மீட்க தேவை இல்லை இந்த உலகமே எங்கள் பெயரால் அதை பயன்படுத்தட்டும் நாமும் கற்போமா ,எமது பிள்ளைகளுக்கு கற்பிப்போமா ,,,எமது ஸ்ரீ சக்கரத்தை ஜெர்மனி அரசாங்கத்தினர் பத்து வருடமாக ஆராய்ந்துகொண்டு இருக்கின்றார்கள் ,,,மாதோட்ட நன்னகர் ,மயன் நாகரி மொழியில் எழுதிய //விமான //வான சாஸ்திரம் ,நாம் எத்தனை பேர் வாசித்து இருக்கின்றோம் ,,ஏன் எங்கள் மூதாதை எழுதியதை எங்களால் வாசிக்க முடியவில்லை ,அன்னியர்கள் எங்கள் மொழிகள் கலைகள் கலாச்சாரம் கண்டுபிடிப்புக்களில் ஆர்வமாய் இருக்கின்றார்கள் ,,,,,,,,நாம் விட்டு கொடுக்கலாமா ,சிந்திப்போம் எமது பெருமைகளை கட்டிகாப்போம் ,,,,,,நன்றி ,,வணக்கம் ,,,சிவமேனகை ,,,,,

முக்கிய குறிப்பு ,,,நாகரி ஒரு மொழி அல்ல ,,,பல மொழிகளை எழுத பயன்படும் ஒரு எழுத்துவடிவம் ,,,,,இந்த எழுத்துவடிவத்தை உருவாக்கியவர்கள் நாகர்கள். முதன் முதலில் இந்த எழுத்துவடிவத்தைகொண்டு எழுதப்பட்ட மொழி தமிழ் ,,,,,,இதுதான் இந்த கட்டுரையின் சாரம் ,,,,,தவறான கற்பிதம் அமைந்துவிடகூடாது ,,,,,,இதில் தெளிவாக இருங்கள் ,,நன்றி ,,,,
 சிவ மேனகை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக