தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 ஏப்ரல், 2014

ஜிமெயிலுக்கான ஷார்ட்கட் கீகள்

இன்றைய சூழலில் பெரும்பாலான நபர்கள் கூகுள் மெயிலை பயன்படுத்துகின்றனர்.
இதற்கான ஷார்ட் கட் கீ தொகுப்புகளை இங்கு பார்க்கலாம்.
இதற்கு முதலில் கூகுள் மெயில் தளத்தில் சென்று, செட்டிங்ஸ் பக்கத்தில் ஷார்ட்கட் கீகளை இயக்கத் தேவையான வகையில் செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.
c (Compose): புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம்
Shift> + c: புதிய விண்டோவில் புதிய செய்தி ஒன்றை உருவாக்கலாம்
k: புதியதொரு கான்வெர்சேஷனுக்கு - இமெயிலுக்கு - செல்வீர்கள். இதனை விரித்துப் பார்க்க என்டர் தட்ட வேண்டும்
j: முந்தைய பழைய கான்வெர்சேஷனுக்கு - இமெயிலுக்கு - செல்வீர்கள். இதனை விரித்துப் பார்க்க என்டர் தட்ட வேண்டும்
n: அடுத்த மெசேஜுக்குக் கர்சர் செல்லும். என்டர் தட்ட மெசேஜ் விரியும்
p: முந்தைய மெசேஜுக்குக் கர்சர் செல்லும். என்டர் தட்ட மெசேஜ் விரியும். விரிந்த நிலையில் என்டர் தட்ட சுருங்கும். இவை இரண்டும் கான்வெர்சஷேன் வியூவில் இருந்தால் தான் செயல்படும்
o அல்லது என்டர்: ஒரு கான்வெர்சேஷனைத் திறக்கும்; திறந்திருந்தால் மூடும்
u: கான்வெர்சேஷன் லிஸ்ட்டுக்குத் திரும்பச் செல்லும். பேஜை ரெப்ரெஷ் செய்து, இன்பாக்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்
e(archive): எந்த வியூவில் இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்படும் கான்வெர்சேஷன்கள் அனைத்தையும் ஆர்க்கிவ் கொண்டு செல்லும்
s (fixing a star): ஒரு மெசேஜ் அல்லது கான்வெர்சேஷனுக்கு ஸ்டார் அடையாளம் அளிக்கிறது. இதன் மூலம் அந்த குறிப்பிட்ட கான்வெர்சேஷன் தனி அந்தஸ்து பெறுகிறது
!:(Spam) குறிப்பிட்ட மெசேஜை ஸ்பாம் எனக் குறியிட்டு உங்கள் கான்வெர்சேஷன் லிஸ்ட்டிலிருந்து அதனை வெளியே தள்ளுகிறது
r: (Reply) மெசேஜ் அனுப்பியருக்கு பதில் அனுப்பப்படும். இதையே ஷிப்ட் கீயுடன் இணைத்து அழுத்தினால், பதில் மெசேஜ் புதிய விண்டோவில் இருக்கும்
a(Reply All): மெசேஜ் பெறும் அனைவருக்கும் பதில் அனுப்பப்படும். இதையும் ஷிப்ட் கீயுடன் இணைத்து அழுத்தினால் பதில் அனைத்தும் புதிய விண்டோவில் உருவாக்கப்படும்
f (forwarding): மெசேஜ் பார்வேர்ட் செய்யப்படும். இதனுடன் ஷிப்ட் இணைந்து அழுத் தினால் பார்வேர்ட் செய்யப்படும் மெசேஜ் புதிய விண்டோவில் கிடைக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக