தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1 துண்டு (துருவியது)
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 3
புளி - கோலி குண்டு அளவு
கடுகு - 3/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
• முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வறுத்து இறக்கிக் ஆற வைக்கவும்.
• ஆறியவுடன் அதனை மிக்ஸியில் போட்டு அதனுடன் தேங்காய், புளி, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
• கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த கலவையில் ஊற்றி கலக்கவும்.
• சூப்பரான சத்தான கறிவேப்பிலை சட்னி ரெடி!!!
http://www.maalaimalar.com/2014/04/16110650/nutrient-rich-curry-leaves-chu.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக