ஏன் அந்த விழா நடத்தப்படுகிறது என்ற காரணத்தை தான் அந்த நண்பர்களுக்கு தெரியப்படுத்துவதுடன் தனது சொந்த மக்களுக்கு நினைவூட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் பிள்ளை பருவமடைந்து விட்டால், அது குறித்து உறவினர்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்தி மகிழ்ச்சியடைவது தமிழர்களின் பழக்கம்.
தமது பிள்ளை வயதுக்கு வருவது தமிழ் குடும்பங்களின் வாழ்க்கையில் ஒரு மகிழ்ச்சியான தருணம்.
உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இது பற்றி அறிவிக்கப்பட்டதும் அவர்கள் மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்து பருவமடைந்த பிள்ளை பார்வையிட்டுச் செல்வார்கள்.
பிள்ளை பருவமடைந்ததும் நடத்தப்படும் பூப்புனித நீராட்டு விழாவுக்கு உற்றார், உறவினர்கள் அழைக்கப்படுவார்கள், அவர்கள் பரிசுகள், பணம் என்பவற்றை அன்பளிப்பாக வழங்குவார்கள்.
அவர்கள் கொடுக்கும் பணம் மற்றும் அன்பளிப்புகள் பற்றி விழாவை நடத்திய குடும்பம் குறிப்பெடுத்து வைத்து கொள்ளும்.
தமது பிள்ளைக்கு செய்தது போல் மற்றவர்களின் குடும்பத்தில் நடக்கும் இவ்வாறான நிகழ்வின் போது திரும்ப செய்வதற்காவே இந்த குறிப்பு எடுக்கப்படுகிறது.
அத்துடன் சிலர் தமது பெருமைகளை காட்டவும் இப்படியான விழாக்களை மிக சிறப்பாக நடத்துவதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/65836.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக