வெண்டைக்காயை பெரும்பாலான மக்களால் விரும்பி உண்ணக்கூடிய ஒரு காய் வகை.
வெண்டையின் காய், இலை, தண்டு அனைத்துமே மருத்துவம் குணம் கொண்டவை.
இதனை சாப்பிட்டால் அறிவு கூடும் என்பார்கள், அதாவது கணக்கு பாடத்தில் நாம் புலியா மாறுவோம்.
வெண்டையின் தன்மை பற்றி பார்க்கலாம்.
வயிற்றுப்புண் குணமாக வெண்டைக்காயை நன்கு அரைத்து 200 கிராம், சீரகம் 20 கிராம், மஞ்சள் தூள் 20 கிராம், வெந்தயக் கீரைச்சாறு 100 மி.லீ, மணத்தக்காளி இலைச்சாறு 100 மி.லீ, பசுநெய் 500 மி.லீ, தேங்காய் பால் 200 மி.லீ வரை உணவில் கலந்து மூன்று வேளை உண்டுவர வயிற்றுப்புண், குடல்புண், குணமாகும்.
அடிக்கடி மலம் சீதம் சீதமாக கழியும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வெண்டைக்காய், மஞ்சள், சுண்டைக்காய் வற்றல், சீரகம், கடுகு, வெஙகாயம், பூண்டு, பட்டை, கருஞ்சீரகம் இவை சேர்த்து அரிசியுடன் கலந்து கஞ்சியாகக் கொதிக்க வைத்து தயிருடன் கலந்து உண்டுவர குணமாகும்.
வெண்டைகாய் விதை 10 கிராம் சோம்பு 10 கிராம், சுக்கு 10 கிராம், தண்ணீர் 200 மி.லீ, இதை குடிநீர் விட்டு அருந்தி வர சிறுநீர் எரிச்சல் மற்றும் உப்புக்கள் கரைந்து சிறுநீர் நன்கு வெளியேறும்.
தோல் வரட்சியைப் போக்கவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியதாகவும், உடலைப் பளபளப்பாக மாற்றுவதற்கும் ஓர் அரிய மருந்தாக வெண்டைக்காய் உபயோகப்படுத்தப்படுகின்றது.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும். பெக்டின் என்னும் நார்ப் பொருளும் இதில் இருக்கின்றது.
எனவே தான் வெண்டைக்காயை நறுக்கி தண்ணீரில் போடக் கூடாது ஏனெனில் அதில் உள்ள கோழைத் திரவம் வெளியேறிவிடும். மற்றும் மக்னீசியமும் இதில் இருப்பதால் இதய துடிப்பையும் சீராக்குகின்றது எனவே இருதய நோயாளிகளுக்கு சிறந்த ஒன்றாகவும் வெண்டைக்காய் விளங்குகின்றது.
மலச்சிக்கலைப் போக்கும் தன்மையும் இதற்கு உண்டு எனவே வெண்டையின் தொண்டை நாமும் பயன்படுத்திக் கொள்வோம்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக