குதிகால் உயர்ந்த காலணி அணிவதில் இளம் பெண்களுக்கு ஆர்வம் அதிகம். ஆனால் அவ்வாறு குதிகால் உயர்ந்த காலணிகளை அணியும்போது சில விஷயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும். அவை பற்றி...
* உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப்பொருத்தமான, அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான 'பிராண்ட்' என்றும், செருப்பின் அழகில் மயங்கியும் உங்கள் கால் அளவுக்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்காதீர்கள்.
* பகல் முழுவதும் நீங்கள் நடந்து வேலைமுடித்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம் பொருத்தமானது.
* நீங்கள் அதிக உயரமாக தெரிய வேண்டும் என்று அளவுக்கு மீறிய 6 அங்குல உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
* 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை.
* குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் 'சோல்' ரப்பரில் ஆனதுதானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல்தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்கப் பாதுகாப்பானதாக இருக்கும்.
* தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் கால்களுக்குக் காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்புத் தரும்.
* குதிகால் செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடியிராமல் ஆங்காங்கே காற்று புகும்படி இருக்க வேண்டும்.
* அதிகநேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். அழகைவிட பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
* குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும்வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதுவே ஆரோக்கியமானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக