தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 30 ஏப்ரல், 2014

நச்சரிப்பதால் மனநோய்கு பலியாகும் உங்கள் திருமண வாழ்க்கை: ஆய்வில் தகவல்!

திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையினை தொடர்ந்து நச்சரிப்பதால், மனஅழுத்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடத்தப்பட்ட அய்வின்படி, இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குடும்ப சண்டைகள், திருமண வாழ்க்கையின் முக்கியத்துவத்தையே அழித்து விடுகின்றன. திருமண வாழ்வில் ஏற்படும் “டென்ஷன், சுமை போன்றவை மகிழ்ச்சியை சின்னபின்னமாக்கி வருகின்றது.
அய்வாளர்கள், திருமணமானவர்களைவிட திருமணம் செய்து கொள்ளாதவர்களே மணம் நிம்மதியாக வாழ்கின்றனர் என்று கூறுகின்றனர்.
அன்றாடம் குடும்ப சண்டைகளினால் ஏற்படும் தொந்தரவின் காரணமாக, நெடுநாளைய மனநோய்க்கு கணவனும், மனைவியும் உள்ளாகின்றனர் என்று இந்த 11 வருட ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
இந்த 11 வருட ஆய்வை wisconsin – Madison பல்கலைக்கழகம் நடத்தி அதன் இறுதியில் இந்த மிகப்பெரிய உண்மையைக் கண்டுபிடித்துள்ளது.
திருமணமான கணவன், மனைவிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், தனது வாழ்க்கைத்துணையின் தொடர்ந்து நச்சரிக்கும் குணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு, மன அழுத்தத்திற்குள்ளாகி, மனநோயினால் பாதிக்கப்படுவது உறுதியாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மனோதத்துவ பேராசிரியார் ரிச்சர்ட் டேவிட்சன் கூறுகையில், இது தொடர்ந்து நீடித்தால் ஏற்படக் கூடிய அபாயத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் இந்த மன அழுத்தம், மனநோயாக மாறுவதற்கு, தொடர்ந்து நச்சரிக்கும் குணமே காரணம், அதிலிருந்து விடுவிக்கப்படாவிட்டால் நிச்சையமாக மனநோய்க்கு கணவன், மனைவிகள் பலியாவது உறுதி என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக