தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 ஏப்ரல், 2014

இதுல இவ்வளவு இருக்கா?

சொக்லேட்டின் மூலப்பொருளான கோகோ பீன்ஸை பற்றி கால காலமாக ஆராய்ச்சி நடந்தாலும், அதற்கு எப்போதுமே நேர்மறை முடிவுகள் தான்.
இதனால் சொக்லேட் சாப்பிடுவதால் வரும் பயன்களை பற்றி பார்போம்.
சொக்லேட் குப்பை உணவு அல்ல
உண்மையான சொக்லேட் கோகோவினால் ஆனாது. கோகோவில் உள்ள ஃப்லவனொல் என்ற பொருள் ஆரோக்கியமான நன்மைகளை தரும். இது உடம்பில் அண்டி ஆக்ஸிடண்ஸ் ஆக செயல்படுகிறது.
இதனால் சொக்லேட் வாங்கும் போது அதிக கோகோ உள்ளடக்கம் உள்ள சொக்லேட்டை வாங்க வேண்டும். அதிகமான கோகோ இருந்தால் அதிகமான நன்மைகளை கொடுக்கும், ஆனால் அதிகமான கோகோவால் செய்யப்பட்ட சொக்லேட் கசப்பாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.
உடலில் உள்ள நல்ல பாக்டீரியாவை வளர்க்கும்
சொக்லேட் உடலில் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆராய்ச்சி நடத்தியுள்ளனர். இதில் உடலின் நல்ல பாக்டீரியா இரகசிய ஆயுதமாக செயல்படுகிறது. இந்த பாக்டீரியா, சொக்லேட்டை அழற்சி கலவைகளாக மாற்றி, இருதய நோய்களை குறைக்க உதவுகின்றது.
இரத்த அழுத்ததை குறைக்கும்
விஞ்ஞானிகள் நடத்திய 20 ஆய்வுகளில் ஒன்பது ஆய்வில், flavanol உட்கொள்வதால் இரத்த அழுத்தம் குறையும் என் தெரியவந்துள்ளது.
அனைத்து 20 ஆய்வுகளும் ஆராயப்பட்ட போது, flavanol நிறைந்த சொக்லேட் இரத்த அழுத்ததை 2mm to 3mm Hg குறைக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இரத்த அழுத்தம் குறைந்தால் கணிசமாக இதய நோய் ஏற்படும் வாய்ப்பும் குறையும் என்பது குறிப்பிடதக்கது.
இரும்பு சத்து பற்றாக்குறை நீக்கும்
100 கிராம் சொக்லேட்டில் உள்ள இரும்பு சத்து, 100 கிராம் கீரையில் உள்ள இரும்பு சத்தை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.
மனநிலை சீராக்க உதவும்
கொக்கோ மோசமான மனநிலையை தகர்த்து நல்ல மனநிலை ஏற்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக