கோடை காலங்களில் உடலின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும்.
கோடையில் உடலின் வெப்பத்தை கட்டுப்படுத்த பல்வேறு பழங்களும், காய்கறி வகைகளும் உதவியாக இருக்கின்றன.
அவற்றில் ஒன்றுதான் புதினா, இந்த புதினாவை மாங்காயுடன் சேர்த்து சட்னி செய்து சாப்பிட்டால், அது உடலுக்கு குளிர்ச்சியுடன், மிகுந்த சுவையையும் கொடுக்கும்.
மாங்காய் புதினா சட்னி செய்முறை
தேவையான பொருட்கள்:
மாங்காய் - 1 (சிறியது)
புதினா - 1 கட்டு
பூண்டு - 4 பற்கள்
ப்ளாக் சால்ட் - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை: முதலில் மாங்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் புதினாவை சுத்தம் செய்து, இலைகளை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்ஸியில் மாங்காய் துண்டுகள், புதினா மற்றும் பூண்டு சேர்த்து லேசாக தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை ஒரு பௌலில் போட்டு, அதில் ப்ளாக் சால்ட், சீரகப் பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறினால், மாங்காய் புதினா சட்னி ரெடி!!!
இதனை தோசை, இட்லி, சாதம் போன்றவற்றுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக