தனது 8-வயதுடைய ஊனமுற்ற மகள் மியாவின் “mama, mama” கேட்டதும் தாய் சாரா வில்கின்சன் ஆச்சரியமடைந்துள்ளார்.
இவள் பிறந்து 29-நிமிடங்களில் முதலாவது வலிப்பு ஏற்பட்டுள்ளது.
தானாகவே குணமாகுமென பெற்றோர் நினைத்தனர். ஆனால் இதுதான் முடிவு என வைத்தியர் இவர்களிடம் தெரிவித்துள்ளார்.
மியா பிறக்கும் போதே அசாதாரண தன்மையான மூளையுடன் பிறந்ததால் இத்தகைய மிகவும் அரிதான வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாள்.
இந்நோயினால் பாதிக்கப் படுபவர்கள் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே மரணமடைந்து விடுவார்கள் எனவும் கூறப்படுகின்றது.
மியா போன்று நீண்ட நாட்கள் உயிருடன் இருப்பவர்கள் மிக மோசமாக முடக்கப்படுவார்கள்.
மிக மோசமான வலிப்பு வரும்போது 22-மணித்தியாலங்கள் வரை நீடிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த யூலை மாதம் மீண்டுமொரு கொடூரமான வலிப்பு ஏற்பட்ட போது மருத்துவரீதியாக தூண்டப்படும் கோமா நிலைக்கு உட்படுத்தப்பட்டாள். இச்சமயம் பெற்றோரும் கைவிட வேண்டியது தான் என நினைத்துள்ளனர்.
இதே நிலை மீண்டும் ஒரு முறை ஏற்பட்டுள்ளது. அவளுடைய உடல்நிலை இவ்வளவு மோசமாக இருந்த போதிலும் மியா எப்போதும் சந்தோசமாகவும் பொம்மைகளுடன் விளையாடியபடியும் இருப்பாள் என தாயார் கூறியுள்ளார்.
நரம்பு நோய் மருத்துவ வல்லுனர் எதுவும் செய்ய முடியாதென கூறியுள்ளார்.
இந்நிலையில் மரியுவானாவினால் வலிப்பு நோயை குணப்படுத்தலாமென தெரியவந்துள்ளது. ஆனால் மிக இளவயதினருக்கு உகந்ததல்ல.
எந்த ஒரு மருந்திற்கும் பலனளிக்காது மியாவின் நிலைமை மிக மோசமாகிகொண்டே போனதனால் மரியுவானா தான் மிச்சமுள்ள மருந்து என நம்பினர்.
ஆனால் குழந்தைபருவ நோயாளிக்கு வைத்தியர்கள் மருத்துவ மரியுவானாவை பரிந்துரைக்க மாட்டார்கள்.
குழந்தை ஒன்று மரியுவானா புகைப்பது என்பது உண்மைக்கு அப்பாற்பட்டது. ஆதனால் அதனை சமைத்து பின்னர் தேங்காய் எண்ணெயுடன் கலக்கப்பட்டது.
முதலாவது மரியுவானாவை மியா சாப்பிட்டு ஒரு நாள் முடிந்ததும் கடுமையான மாற்றங்கள் தெரிந்ததாக கூறப்படுகின்றது.
24-மணித்தியாலங்களில் வலிப்பு நின்றுவிட்டது என வில்கின்சன் கூறியுள்ளார். மூளைமின்னலைவரவு பரிட்சை மூலம் மூலிகை பொங்கிஎழும் மூளையை அமைதிப்படுத்திவிட்டதாக தெரியவந்துள்ளது.இத்தகைய ஒரு சம்பவம் முன்னொரு போதும் நடக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
இந்த மரியுவானா அதிசயம் ஒரு புதிராக உள்ளது.
தீர்க்கமுடியாத வலிப்பு நோய் குறைபாடுகளால் துன்புறும் நூற்றுக்கணக்கான குழந்தைகளையும் குணப்படுத்தலாமென கூறப்பட்டுள்ளது.
இதேநேரம் மியா வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கின்றாள். அத்துடன் yes,” “no” and “mama,” என்ற 3 வார்த்தைகளையும் சொல்கின்றாள். அத்துடன் நடக்கவும் பயில்கின்றாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக