தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 19 ஏப்ரல், 2014

காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்.


இரும்பு, இரத்தம், வேர்வை, மற்றும்
அழகியல்.....!

தமிழில், மார்க்வெஸ் பற்றிய அறிமுகம்
பெரும்பாலும்,அவருடைய இலக்கிய
ஆளுமையைப் பற்றிதாகவே உள்ளது.
இது அவருடைய இயல்பான ஆளுமையை குறைத்து மதிப்பீடு செய்வதாகவும்,அவருடைய அரசியல் மற்றும் சமூகப்பணியை புறக்கனிப்பதாகவும் உள்ளது.
அவருக்கு வேறெரு மரபு இருக்கிறது.புரட்சிகர அரசியலின்
இடதுசாரி அறிவுஜீவி மற்றும்,காலணியாதிக்கத்திற்கு எதிரான மரபும்
அவருக்கு உண்டு.ஒரு சராசரி வாசகன்
இதைத் தவிர்த்துவிட்டு அவருடையவாசகனாக இருக்க முடியாது.
ஒரு பராம்பரியமிக்க
இடது சாரி மரபோடுதான்அவரை
இணைத்துப் பார்க்க முடியும்.இலத்தின் அமெரிக்க நாடுகளில் உள்ள புரட்சிகர இயக்கங்களோடும் , மக்கள் ஜனநாயக இயக்கங்களோடும் ,மற்றும்
அதன் அரசியல் தலைவர்களோடும்
தன்னை இணைத்துக்
கொண்டு தன்னுடையப் படைப்பின்
மூலம், இலத்தின் அமெரிக்க நாடுகளின்
அசலான முகத்தை, அதன் போர்குனத்தை உலகத்துக்குத்
தெரியப்படுத்தயவர்.
அவருக்கு உண்மையான
அஞ்சலி என்பது அவருடைய இலக்கிய
அரசியலைப் பின்பற்றுவதாகதான்
இருக்க முடியும். அவருக்கு நம்முடைய
அஞ்சலியை செலுத்துவோம்.. !

தமிழ் இலக்கியசூழலில் மிகக்குறைவாக உள்ள இடதுசாரிகளும் மார்குவெஸிடம் கற்றுக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக