தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 23 ஏப்ரல், 2014

கழுத்தில் 10 கிலோ எடை: இது மியான்மர் பெண்களின் வாழ்க்கை

மியான்மர் நாட்டில் வசிக்கும் பழங்குடியின பெண்கள் தங்களது கழுத்தில் 10 கிலோ எடையுள்ள இரும்பு வளையங்களை மாட்டிக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.
மியான்மரின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள கையா மாகாணத்திற்கு அருகேயுள்ள காயன் என்னும் பழங்குடி இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர்.
இங்கு வசிக்கும் பெண்கள் தங்களது கழுத்தில் சுமார் 10 கிலோ எடையுள்ள இரும்பு வளையங்களை மாட்டிக்கொள்ளும் வித்தியாசமான பழக்கத்தை கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாங்கள் சிறு வயதிலேயே இது போன்ற ஆபரணங்களை அணிவோம் என்றும் எங்களுக்கு இது பழக்கமாகி விட்டது எனவும் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக