தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, April 30, 2014

தூக்கம் வரவில்லையா? அப்போ செர்ரி பழங்களை சாப்பிடுங்கள்!

நன்றாக வேலை செய்தும் தூக்கம் வராதவர்கள் செர்ரி பழங்களை சாப்பிடுவதன் மூலம் நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
அமெரிக்காவின் லூசியானா மாநில பல்கலைகழகத்தின் பென்னிங்டன் உயிர் மருத்துவ ஆய்வு மையத்தை சேர்ந்த பிராங்க் எல். கிரீன்வே என்பவர் தலைமையில் மேற்கொண்ட ஆய்வு எளிதாக தூக்கம் வருவதற்கான தகவலை தந்துள்ளது.
அவரது கருத்துப்படி, இளம் வயதில் தூக்கம் வராமல் பாதிக்கப்படுபவர்களுக்கு தூக்க மாத்திரைகள் ஒரு தீர்வாக இருக்கும். ஆனால், தூக்கம் வராமல் பாதிக்கப்படும் முதியவர்களில் இது வேறு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
தூக்க மாத்திரை எடுத்து கொண்ட அவர்கள் கீழே விழுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு உடலில் காயங்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், முன்னதாகவே மரணம் வரும் சூழலும் இதனால் ஏற்படும் என்று கிரீன்வே தெரிவித்துள்ளார்.
தூங்கி எழுவதில் ஏற்படும் பிரச்சனையை சரி செய்யும் விதமாக மெலடோனின் என்ற ஹார்மோன் செயல்படுகிறது. இது செர்ரி பழங்களில் அதிகம் காணப்படுகிறது. இதனை காலை மற்றும் மாலை என இரு வேளைகளில் பழ சாறாக நாம் எடுத்து கொண்டால் தூக்கம் வராமல் ஏற்படும் பாதிப்பில் இருந்து விடுபடலாம்.
மேலும், தூக்கத்துக்கு துணைபுரியும் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலத்தை அதிகரிக்க செய்யும் வேதிபொருள்கள் இவற்றில் காணப்படுகிறது. செர்ரி பழங்களில் டிரிப்டோபான் மிக குறைவாக காணப்பட்டாலும் அவற்றில் உள்ள வேதிபொருள் டிரிப்டோபோன் உடைவதில் இருந்து அவற்றை பாதுகாக்கும் பணியினை மேற்கொள்கிறது.
இந்த வேதிசேர்மங்கள் டிரிப்டோபான் அமினோ அமிலத்தை பாதுகாப்பதால் அவை தூக்கம் வர துணைபுரியும் செரடோனின் என்ற வேதிபொருள் உற்பத்திக்கும் துணை புரிகிறது.
எனவே, முதியவர்கள் தூக்க பாதிப்பில் இருந்து விடுபட்டு நீண்டநேர தூக்கத்தில் இருப்பதற்கு செர்ரி பழங்கள் பயன்படுகின்றன என்று ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment