பெண்களை இன்று தாக்கும் இரு வகை புற்றுநோய்கள் .ஒன்று மார்பக புற்றுநோய் ,இன்னொன்று கருப்பை வாய் புற்றுநோய் ! மார்பக புற்றுநோய்க்கு பெரும்பாலும் நகர பெண்களே ஆட்படுகிறார்கள் .முன்பெல்லாம் பெற்றோர்களே தங்கள் மகளுக்கு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து வைப்பார்கள் .இன்று இளைஞர்கள் வரதட்சணையை மாதம்தோறும் பெற்றுகொள்வதையே விரும்புகின்றனர் .அதாவது வேலைக்கு போகும் பெண்களை திருமணம் செய்வதுலேயே அவர்கள் விருப்பம் காட்டுகின்றனர் .இன்றைக்கு நகரப் பெண்கள் நல்ல வேலைக்கு சென்று பொருளாதார ரீதியில் வெற்றிப் பெற்ற உடன்தான் திருமணமே செய்கின்றனர் .முப்பது வயதுக்கு மேல் திருமணம் .பாரம்பரிய உணவுகளை தவிர்த்து பாஸ்ட் புட் உணவுகளை உண்பதால் குறைந்த வயதில் பூப்படைந்து முப்பது வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது ,தாமதமாக திருமணம் செய்தும் 35 வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது ,பெற்றக் குழந்தைக்கு தன் உடல் அழகை காப்பதற்காக தாய்பால் தர மறுப்பது என மார்பக புற்று நோயின் கரணங்கள் நீண்டு கொண்டே போகின்றன .
கருப்பை வாய் புற்றுநோய் பெரும்பாலும் கிராமத்து பெண்களையே தாக்குகின்றன.இதற்க்குக் காரணம் மாதவிடாய் காலங்களில் அவர்கள் பயன்படுத்தும் துணிகளே இதற்க்கு காரணம் .அந்தத் துணிகளை அவர்கள் பயன்படுத்திவிட்டு அதை அவர்கள் வெய்யிலில் காயவைப்பது இல்லை .அதை ரகசியமாக வீட்டுக்கூரையில் மறைத்து வைக்கின்றனர் .மீண்டும் அதே துணியை அடுத்த மாதம் பயன் படுத்துகின்றனர் .அதற்குள் அதில் ஏராளமான கிருமி தொற்று ஏற்படுகின்றன .அவைதான் அவர்களின் கருப்பை வாய் புற்றுநோய்க்கு காரணம் !-மருத்துவர் விதுபாலா (அண்ணா பண்பலை வானொலியில் 90.4 fm ).
எதை எதையோ இலவசமாக வழங்கும் தமிழக அரசு பெண்களுக்கு இலவச நெப்கின்களை வழங்கலாம் .மாடுகளையும் ஆடுகளையும் வண்ணத் தொலைக்காட்சிகளையும் வழங்கும் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் இதை அறிவிக்கலாம் .பெண்களுக்கு தேர்தலில் நிற்பதற்கு சீட்டே தராத கட்சிகள் எங்கிருந்து நேப்கின்களை தரப்போகிறது !

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக