தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 மார்ச், 2015

கண்டிப்பாக சாப்பிட வேண்டிய காய்கறிகள் என்னென்ன?

அன்றாடம் வாழ்வில் காய்கறிகளை சேர்த்துக்கொண்டால் ஆரோக்கியமான வாழ்வு நிச்சயம்.
அவ்வாறு காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளும் நாம் அதன் பயன்களை அறிந்துகொள்வது நல்லது.
வாழைக்காய்
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி, சத்துக்கள் அதிகம் உள்ளது. வாயுவைத் தூண்டும் குணமுள்ளதால் இதை சமைக்கும்போது அதிகளவில் பூண்டு சேர்த்துக்கொள்வது நல்லது, மலச்சிக்கலை தீர்க்கும்.
மாங்காய்
மாங்காயில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ உள்ளது. சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது சூட்டைக் கிளப்பும்.
மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். செரிமானத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும், பசியைத் தூண்டும்.
பாகற்காய்
பாகற்காயில் பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் சிறந்த உணவாகும்.
வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும், அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.
தொற்று நோய்களை தடுத்து கிருமிகளை அழிக்கும், வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.
பூசணிக்காய்
பூசணிக்காயில் புரதம், கொழுப்பு உள்ளது, ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் இதனை சாப்பிடக் கூடாது.
குழந்தைகளுக்கும், மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது.
நரம்புகளுக்கு வலுவூட்டும், வயிற்றுப் புண்களை ஆற்றும் தன்மை கொண்டது.
காரட்
வைட்டமின் ஏ, கார்போஹைட்ரேட், தாது உப்புகள், மெலோனிசைட்ஸ் என்ற நிறமி அணுக்கள் இவற்றில் உள்ளன.
குழந்தை பேறு இல்லாதவர்கள் அதிகம் சேர்க்க வேண்டாம். சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
கண் பார்வைக்கு உகந்தது, காரட் சாறுடன் பத்து மிளகு சேர்த்து சாப்பிட்டுவர உடல் கழிவுகள் வெளியேறும்.
காலிஃபிளவர்
காலிஃபிளவரில் பொட்டாசியம், சோடியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், விட்டமின் ஏ, இ உள்ளன.
புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அளித்து புற்றுநோய் வளர்ச்சியை கட்டுப்படுத்தும்.
மலச்சிக்கலை போக்கி உடலை இளைக்கச் செய்யும்.
சுண்டைக்காய்
வைட்டமின் சி அதிகம் உள்ளது, சிறுவர்கள் வாரம் இருமுறை சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி சேராது. ஆஸ்துமா நோயாளிகள் தினசரி சாப்பிட மூச்சுத்திணறல் குறையும்.
கர்ப்பிணிப் பெண்கள் மாதம் ஒருநாள் சாப்பிடலாம்.
கிருமிகள், வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். நுரையீரலுக்கு செயல்திறன் தரும், சளியைக் கரைக்கும் தன்மை கொண்டவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக