உணவில் சுவைக்காகவும், மணத்திற்காகவும் சேர்க்கப்படும் இஞ்சியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
ஆயுர்வேதத்தில் பல்வேறு நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.
உங்களுக்கு பசி எடுக்காமல் இருந்தால், சாப்பிடுவதற்கு முன் சிறு இஞ்சியை சாப்பிட்டால் பசியை நன்கு தூண்டிவிடும்.
இதில் நிறைந்துள்ள சத்துக்கள் சீரான செரிமானத்திற்கு உதவுகிறது.
குமட்டல் வரும் போது, சிறிது இஞ்சியை தேனில் தொட்டு வாயில் வைத்தால் குமட்டல் நின்றுவிடும்.
மூட்டுவலி மற்றும் வயிற்று பிடிப்பால் அவஸ்தைப்படுபவர்கள் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்றால் நிவாரணம் பெறலாம்.
மூக்கடைப்பால் ஒரே தொந்தரவாக இருக்கும் போது, இஞ்சி டீ குடிப்பது நல்லது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக