இன்றைய தலைமுறையினர் எண்ணெய்யில் நன்றாக வறுத்த உணவுகளையே அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
அவற்றால் பல உடல்நலக்கேடுகளை சந்தித்தாலும், அதனைப் பற்றி கவலைப்படாமல் மீண்டும் அவ்வகை உணவினையே நாடிச்செல்கின்றனர்.
ஆனால், பொறித்த உணவுகளை காட்டிலும் இட்லி போன்ற அவித்த உணவுகளில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன.
எண்ணெய் உபயோகம் இல்லை என்பதால் அவித்து சமைக்கும் உணவுகளில் கொழுப்புச்சத்து குறைவாக இருக்கும்.
கொழுப்புச்சத்து குறைவாக இருப்பதால் உடல் எடை குறையும். எடையை குறைக்க விரும்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டில் அவித்த உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது.
எண்ணெய் இன்றி சமைக்கப்படுவதால் அவித்த உணவுகள் இதயத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறது.
எனவே, இதய பாதிப்புகள் அல்லது கோளாறுகள் உள்ளவர்கள் அவித்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.
இவ்வகை உணவுகள் மென்மையாக இருப்பதால் எளிதில் ஜீரணமாகிவிடும். இதனால், வயிற்று உபாதைகளோ அல்லது செரிமான கோளாறுகளோ ஏற்படாது.
ஆவியில் வேக வைத்த மக்காச்சோளம், கம்பு, வரகு போன்ற சிறு தானிய உணவுகளை எண்ணெயில் சமைத்து சாப்பிடுவதை விட அவித்து சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.
அவிக்கப்பட்ட ப்ராக்கோலியில் வைட்டமின் சி மற்றும் குளோரபைல் போன்ற சத்துகள் பாதுகாக்கப்படுகின்றன. மீனைக் கூட அவித்து சாப்பிடுவதால் அதில் இருந்து கிடைக்க வேண்டிய சத்துக்கள் முழுமையாக உடலை சென்றடைகின்றன.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக