தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 21 மார்ச், 2015

அதிகரிக்கும் மரணங்கள்…அச்சுறுத்தும் நோய்


உலகம் முழுவதும் ஆட்டிப்படைக்கும் பன்றிக்காய்ச்சல் என்னும் நோயால் பலியானோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
எச்1என்1 (H1N1) வைரஸ் என்று அழைக்கப்படும் ஒரு கலப்பின நுண்ணுயிரிதான் (Mutated virus) இந்தக் காய்ச்சலுக்குக் காரணம்.
மெக்சிகோ, கனடா போன்ற நாடுகளில் குப்பையில் கொட்டப்படும் பன்றி இறைச்சி, கோழி இறைச்சி போன்றவை அழுகிய நிலையில் இருக்கும்போது, அதில் இருந்து உருவாகும் நுண்ணுயிரி தான் இந்த நோயை பரப்புகிறது.
எப்போது பரவும்?
பொதுவாக, குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கும் காலத்தில்தான், எல்லா வைரஸ்களின் தாக்கமும் அதிகமாக இருக்கும்.
இந்த வைரசும் அதேபோன்று காற்று மூலம் பரவக்கூடியது. நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களை இந்த வைரஸ் எளிதில் தாக்கி, கபத்தை உண்டாக்கும்.
முக்கியமாக, காசநோய் இருப்பவர்களுக்கு உடனடியாகத் தொற்றி, நோயை இன்னும் தீவிரமாக்கிவிடும்.
அறிகுறிகள்
“மூக்கு, தொண்டை போன்ற மேல் சுவாசப் பாதை (Upper respiratory tract) உறுப்புகளைத்தான் இந்தக் கிருமி முதலில் தாக்கும்.
எனவே, மூக்கு எரிச்சல், மூக்கில் நீர் வழிதல், மூக்கடைப்பு, தொண்டையில் தொற்று, தொண்டை வலி எனத் தொடங்கி காய்ச்சல் வரை பிரச்சனைகள் ஏற்படும்.
நோய் கண்டறிதல்
காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், 4 அல்லது 5 நாட்களுக்குள் தெரிந்தவுடன், உங்கள் சுவாச மாதிரி சேகரிக்கப்படுகிறது.
வைரஸ் மரபணு அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டவுடன், PCR (Polymerase Chian Reaction)சோதனை செய்யப்படுகிறது.
சோதனை முறையில் நோயாளிக்கு பன்றி காய்ச்சல் இருப்பதற்கான சாதகமான பதிவுகள் வந்தால், உடனடியாக சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.
ஆரம்ப நிலையிலேயே பன்றிக் காய்ச்சல் நோய் கண்டுபிடிக்கப் பட்டால், அதை முழுவதுமாகக் குணப்படுத்தலாம். வைரஸ் எதிர்ப்பு மருந்துகளான Tamiflu / Fluvir மற்றும் Relenza  நோயாளிகளுக்கு வழங்கப்படும்.
National Institute for Communicable Diseases, (NICD) அறிவுரையின்படி, அறிகுறி தோன்றிய 48 மணி நேரத்திற்குள் இந்த மருந்தை அளிக்க வேண்டும்.
கட்டுப்பாடு மற்றும் சாப்பிட வேண்டிய உணவுகள்
1. தினமு‌ம் குறை‌ந்தப‌ட்ச‌ம் ஒரு வேளை சு‌த்தமான ‌நீ‌ரி‌ல் கு‌ளியு‌ங்க‌ள். நோய்க்கிருமி எதிர்ப்பு சக்தி கொண்ட சோப்பை‌க் கொ‌ண்டு அடிக்கடி கைகளை கழுவுங்கள். குழாய் தண்ணீரில் குறைந்த பட்சம் 15 வினாடிகள் கைகளை அலசுங்கள்.
2. வெ‌ளி‌யி‌ல் செ‌ன்று ‌வி‌ட்டு வ‌ந்தது‌ம் கை‌, கா‌ல், முக‌ம், கழு‌த்து‌ப் பகு‌திகளை சு‌த்தமான த‌ண்‌ணீரா‌ல் ந‌ன்கு கழுவு‌ங்க‌ள்.
3. இரவில் குறைந்த பட்சம் 8 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். உட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌ற்கு உற‌க்க‌ம் அவ‌சிய‌ம்.
4. வறுத்த அரிசி அல்லது வறுத்த நெய்யில் கஞ்சி செய்து அருந்தலாம். தொட்டுக்கொள்ள, தூதுவளை அல்லது இஞ்சித் துவையல் நல்லது.
5. வடித்த சோற்றில், மீண்டும் ஒரு முறை தண்ணீர் ஊற்றி, அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வேகவைத்து, அந்தத் தண்ணீரை வடித்து அருந்தலாம்.
6. குழைய வடித்த சுடு சோற்றில், சுண்டை வற்றல் பொடி சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். இட்லிக்கும் இந்தப் பொடியைத் தொட்டுக்கொள்ளலாம். சுண்டை வற்றலைக் குழம்பாகச் செய்து சாப்பிடலாம்.
7. அன்னாசிப் பழம் மிகவும் நல்லது, உணவில் சேர்த்துக் கொள்ளலாம். பன்றிக் காய்ச்சலுக்கு மருந்தாக வழங்கப்படும் ‘டேமிஃப்ளூ’ மாத்திரைகளில் அன்னாசி கலந்துள்ளது.
8. பால், தயிர் தவிர்க்க வேண்டும். விருப்பப்பட்டால், மோர் குடிக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக