தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 14 மார்ச், 2015

மணத்தக்காளி கீரையின் மகத்துவம் தெரியுமா?

கடவுள் நமக்கு கொடுத்த வரப்பிரசாதங்களில் ஒன்று தான் கீரைகள்.
கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன, அவற்றில் ஒரு வகை தான் மணத்தக்காளி கீரை.
இந்த கீரையின் தண்டு, இலை, காய், பழம் போன்ற அனைத்துமே சமையலில் மட்டுமின்றி, மருத்துவத்திலும் பயன்படுகிறது. மேலும் 100 கிராம் கீரையில் நீர்ச்சத்து 82.1%, புரோட்டீன் 5.9%, கொழுப்பு 1%, தாது உப்புக்கள் 2.1% உள்ளது.
* வயிற்றுப் புண், வாய்ப்புண் உள்ளவர்கள் மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் பெறலாம்.
* மலச்சிக்கலால் அவதிப்படும் நபர்கள் மணத்தக்காளி கீரையை சாப்பிட்டு வந்தால் இப்பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
* மேலும் செரிமான பிரச்னை உள்ளவர்கள் இதனை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு சத்துக்கள் கிடைப்பதுடன், இப்பிரச்னையும் நீங்கிவிடும்.
* காசநோய் உள்ளவர்கள் இந்த கீரையின் பழத்தை சாப்பிடுவது நல்லது.
* சருமத்தில் ஏதேனும் அலர்ஜி, உஷ்ணத்தால் ஏற்படும் கட்டிகள் உள்ள இடத்தில் மணத்தக்காளி சாற்றினை தடவினால் விரைவில் குணமாகும்.
* மஞ்சள் காமாலையினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு மற்றும் இதர கல்லீரல் பிரச்னை உள்ளவர்கள் இக்கீரையை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* மணத்தக்காளி கீரை மற்றும் பழத்தினை காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
இதனை காலை மற்றும் மாலையில் 1/2 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால், நெஞ்சு வலி குணமாவதோடு இதயமும் வலிமையடையும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக