வெற்றிலை பாக்குடன் கூடிய தாம்பூலம் என்பது மங்கலப் பொருள் ஆகும்.
வீட்டில் நடைபெறும் அனைத்து சுபகாரியங்களுக்கும் தாம்பூலத்தை பயன்படுத்துவார்கள்.
மிகச் சிறந்த “நோய்த்தடுப்பு ஆற்றல்" தாம்பூலத்தில் உள்ளது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலம் மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பினை தூண்டுவதுடன் ஒரு வித உற்சாக உணர்வினை தருகிறது.
வெற்றிலைக்கு தாம்பூலம், தாம்பூலவல்லி, திரையல், நாகவல்லி, மெல்லிலை, மெல்லடகு, வெள்ளிலை என்று பல பெயர்கள் உண்டு.
ஆனால் வெற்றிலை என்னும் சொல்லே நடைமுறையில் உள்ளது.
கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.
மருத்துவ பயன் உடைய பகுதிகள்
வெற்றிலையின் ஒவ்வொரு பகுதிகளிலும் மருத்துவ குணங்கள் உண்டு, இலைகளில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய், மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது.
இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும்.
இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.
வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும்.
தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.
நமது உடலில் சுரக்கும் 24 விதமான “அமினோ அமிலங்கள்" வெற்றிலையில் உள்ளன. செரிமானத்துக்கும் பெரிதும் உறுதுணையாகும் இந்த “அமினோ அமிலங்களை" வெற்றிலை மூலம் நாம் அடையும்போது ஜீரணம் எளிதாகின்றது.
அதனால்தான் உணவுக்குப் பின் “தாம்பூலம்" தரிக்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக