கல்லை இணைத்துக் கட்டுவதே சவாலான வேலை, இங்கு அதை விட பிரம்மாண்டமான வேலை அரங்கேறியுள்ளது. நடுவே கோயில் வேலைக்கு தேவையான பாறை போக சுற்றி மீதமுள்ள பாறை முழுவதையும் வெறும் சுத்தியலையும் உளியைக் கொண்டும் பல மாத போராட்டதிற்கு பிறகு குடைந்து எடுத்திருந்திருக்க வேண்டும்.
இப்போது நடுவே எஞ்சி இருக்கும் பாறையில் பணிகளை துவங்க வேண்டும், இதற்கு முன் மலையைக் குடைந்து குடவரை மட்டுமே செய்த சிற்பிகள் ஒரு புதிய முயற்சியில் இறங்குகிறார்கள், மனம் எப்படி பட படத்திருக்கும்? மேலே கிரிவம் என்ன அளவு வர வேண்டும், கழுத்து என்ன அளவு? அதற்கு கீழ் அதை சுற்றி நந்திகள் என்ன அளவு? என்னென்ன அலங்கார வேலைகள் அதில் இருக்க வேண்டும் என்ற வரைபடங்கள் பனை ஓலையில் வரையப்பட்டிருக்க வேண்டும், வேலை துவங்கியவுடன் எந்த மாறுதலையும் செய்ய முடியாது என்பதால், மிக கவனமாக திட்டங்கள் தீட்டப்பட்டிருக்க வேண்டும், ஒரு வேளை கணக்குபடி பாறை குடைய முடியாமல் தவறு ஏதேனும் நேர்ந்து பாறை அளவு குறைந்து விட்டால்?, குடைந்ததை வைத்து கணக்கை மாற்றி பணிகளை எப்படி தொடர வேண்டும்?
பாண்டிய நாட்டில் இருக்கும் பெருந்தச்சனில் எவன் கொம்பனாக இருந்திருப்பானோ அவன் தலைமையில் தானே இந்த வேலையை துவங்கி இருக்க வேண்டும்?.
படுபாவி தான் பெயரைக் கூட அதில் குறிப்பிடாமல் இப்படி தனியாக புலம்ப விட்டு சென்றுவிட்டானே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக