தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 11 மார்ச், 2015

விநாயகரின் திருமணத்தைப் பற்றிய 2 காதல் கதைகள்!

எந்த ஒருது விஷேசம் என்றாலும் முதன்மை கடவுளாக வழிபடப்படுபவர் தான் விநாயகர். இதனால் தானோ என்னவோ பலருக்கும் விநாயகர் மிகவும் விருப்பமான கடவுளாக விளங்குகிறார். சில இந்து பண்பாடுகளில், இந்து கடவுளான விநாயகரை திருமணம் ஆகாத கடவுளாக கருதுகின்றனர். ஆனால் சில பண்பாடுகளில் அவரை ஒரு குடும்பஸ்தனாக கருதுகின்றனர். குபேரனின் கர்வத்தை அழிக்க விநாயகர் எடுத்த பாடம்! அதன் படி, சித்தியும் ரித்தியும் தான் அவரின் மனைவிகள் ஆவார்கள். விநாயகருக்கு எப்படி திருமணம் நடந்தது என்பதை விளக்கும் அற்புதமான கதை உள்ளது. இங்கு விநாயகரின் திருமணத்தைப் பற்றிய 2 காதல் கதைகள் கொடுக்கப்பட்டுள்ளன.


திருமணத்திற்கு சண்டை போட்ட விநாயகரும் முருகனும் தன் மகன் விநாயகர் ஆற்றிய சேவைகளை கண்டு சிவபெருமானும் பார்வதி தேவியும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். தாரக அசுரா என்றொரு அசுரனை அழிக்க அவர்களுக்கு இரண்டாவதாக ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு கார்த்திகேயன் என பெயரிட்டனர். தன்னை வழிபடுபவர்களுக்கு பிராமணனின் அறிவை வழங்கி வந்ததால், இந்த அண்டேமே அவரை சுப்பிரமணியா என அழைத்தது. தன் இரு மகன்களான விநாயகரும் சுப்பிரமணியனும் வாலிப வயதை அடைந்து விட்டதால், பிரபஞ்சத்தின் கடவுளான சிவபெருமானும் பார்வதி தேவியும் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள். அவர்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தங்கள் பெற்றோரின் முடிவினை அறிந்த இரண்டு மகன்களும் சண்டையிட்டு கொள்ள ஆரம்பித்தார்கள்.

 சண்டையை நிறுத்த சிவன் மற்றும் பார்வதி தீட்டிய திட்டம் அவர்களை சமாதானப்படுத்த சிவபெருமானும் பார்வதி தேவியும் ஒரு திட்டம் தீட்டினர். அதன் படி அவர்களை அருகில் அழைத்து, அவர்களிடம் "எங்களின் அருமை புதல்வர்களே, உங்கள் இருவரையும் நாங்கள் சமமாகவே நேசிக்கிறோம். உங்கள் சண்டையை தீர்த்து வைக்க, நாங்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். உங்கள் இருவரில் யார் பூமியை முதல் ஆளாக சுற்றி வருகிறீர்களோ அவருக்கு தான் முதலில் திருமணம்." என கூறினார்கள்.

விநாயகர் மற்றும் முருகன் இதனை கேட்ட முருகப்பெருமான் உடனடியாக தன் வாகனமான மயிலின் மீது அமர்ந்து, விநாயகரை முந்தி விட்டு முதல் ஆளாக வர வேண்டும் என, மிக வேகமாக பூமியை சுற்றத் தொடங்கினார். ஆனால் அவர்களின் பெற்றோருக்கு ஆச்சரியம் அதிகரித்தது. அதற்கு காரணம் கிளம்புவதற்கு தயாராகாமல் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் அருகிலேயே விநாயகர் நின்று கொண்டிருந்ததே. மாறாக தன் வழிபாட்டு சேவையை ஏற்றுக் கொண்டு, தான் வழங்கிய இரண்டு இருக்கையில் அவர்களை அமரச் சொல்லி வேண்டினார். அவர் வேண்டுதலை ஏற்று, சிவபெருமானும் பார்வதி தேவியும் உடனடியாக அந்த இருக்கையில் அமர்ந்தனர்.

வெற்றி பெற்ற விநாயகர் அவர்கள் இருவரையும் மிகுந்த பக்தியுடன் ஏழு முறை சுற்றி வந்து, ஏழு முறையும் மரியாதை செய்தார் விநாயகர். தன் ஏழாவது முறையை முடிக்கும் வேளையில் முருகப்பெருமான் உலகத்தை சுற்றி வரும் தன் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்தார். தன் தாய் தந்தையை கூறியதை போல, தானே முதலில் உலகத்தை சுற்றி வந்ததால் தனக்கே முதலில் திருமணம் நடக்க வேண்டும் என முருகப்பெருமான் கூறினார். விநாயகர் உலகத்தை சுற்றி வரவே இல்லையே.

விநாயகரின் கூற்று இந்த தருணத்தில், "தெய்வீக தாயே, ஆண்ட சராசரத்தின் தந்தையே, யார் தன் பெற்றோரை சுற்றி வருகிறாரோ, அவர் இந்த பூமியை சுற்றி வந்ததற்கு (பூமி பிரதக்ஷணம்) சமமாகும் என வேதம் கூறுகிறது. பூமியில் உள்ள மானிட பெற்றோர்களைச் சுற்றி வந்தாலே இது பொருந்தும் என்றால் தெய்வீக பெற்றோரான உங்களை சுற்றி வரும் போது இன்னும் எத்தனை மடங்கு அதிகமாகவே பொருந்த வேண்டும்? உங்கள் ஏழு முறை சுற்றி வந்ததால், நான் உலகத்தை மட்டுமல்லாது, இந்த அண்டத்தையே சுற்றி வந்துள்ளேன்! அதனால் எந்த ஒரு தாமதமும் இன்றி என் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்." என விநாயகர் கூறினார்.
விநாயகருக்கே முதலில் திருமணம் விநாயகரின் சாதூரியமான இந்த பேச்சை கேட்ட சிவபெருமானும் பார்வதி தேவியும் குளிர்ந்து போனார்கள். அதனால் விநாயகருக்கே முதலில் திருமணம் நடத்த முடிவும் செய்தார்கள்.
ரித்தி மற்றும் சித்தி விநாயகரை திருமணம் செய்து கொள்ள பிரஜாபதி விஸ்வரூபனின் இரண்டு அழகிய புதல்விகளான ரித்தி மற்றும் சித்தி தேர்ந்தெடுக்கப்பட்டனர். தெய்வீக சிற்பியான விஸ்வகர்மா ஒரு அழகிய திருமண மண்டபத்தை வடிவமைத்து, திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். விநாயகருடனான ரித்தி மற்றும் சித்தியின் திருமணத்தை சிவபெருமானும் பார்வதி தேவியும் கண்டு களித்தனர். விநாயகருக்கு ரித்தியின் மூலமாக லாபா என்ற மகனும், சித்தி மூலமாக சுபா என்ற மகனும் பிறந்தார்கள். இவையனைத்தையும் அமைதியாக கண்டு வந்த முருகப்பெருமான், தன் பெற்றோர் மற்றும் சகோதரனுடன் கோபித்துக் கொண்டு, கைலாச மலையில் இருக்கும் மானசா ஏரியின் அருகிலுள்ள க்ரௌஞ்சா மலைக்கு சென்றார். (விநாயகரின் திருமணத்திற்கு பிறகு, வள்ளி மற்றும் தெய்வயானை என இரண்டு அழகிய பெண்களை முருகப்பெருமான் திருமணம் செய்து கொண்டார் என கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது.)
விநாயகரின் திருமணத்தை பற்றிய மற்றொரு கதை விநாயகருக்கு யானை தலை என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள எந்த பெண்ணும் ஒப்புக்கொள்ளவில்லை. மற்ற அனைத்து கடவுள்களுக்கும் துணைவி இருந்த போது, தமக்கு மட்டும் இல்லையே என்பதால் அவருக்கு கோபம் ஏற்பட்டது. அதனால் தேவர்களின் திருமணங்களில் அவர் குழப்பங்களை ஏற்படுத்த தொடங்கினார். திருமண சடங்கின் ஒரு பகுதியாக தேவர்கள் மணப்பெண்ணின் வீட்டை நோக்கி செல்லும் பாதைகளில் எலிகளை விட்டு குழியை தோண்ட சொன்னார்.இதனால் தேவர்கள் அனைவரும் தங்களின் திருமணத்தின் போது எண்ணிலடங்கா பிரச்சனைகளை சந்தித்தார்கள். விநாயகரின் நடவடிக்கைகளால் சோர்ந்து போன அவர்கள் இந்த பிரச்சனையை தீர்த்து வைக்குமாறு பிரம்மனிடம் முறையிட்டார்கள்.
பிரம்மன் உருவாக்கிய ரித்தி மற்றும் சித்தி அதனால் விநாயகரின் மனதை குளிர வைக்க ரித்தி (செல்வமும் வளமும்) மற்றும் சித்தி (அறிவும் ஆன்மீக சக்தியும்) என்ற இரு அழகிய பெண்களை பிரம்மன் உருவாக்கினார். விநாயகரை திருமண செய்து கொள்ள பிரம்மன் அவர்களை தந்தார். அன்று முதல் விநாயகர் மனம் குளிரும் படி நடப்பவர்களுக்கு ரித்தி மற்றும் சித்தி அவர்களின் அருளும் கிடைக்கும். ரித்தி மற்றும் சித்தி மூலமாக விநாயகருக்கு இரண்டு மகன்கள் - சுபா (மங்களகரம்) மற்றும் லாபா (லாபம்). விநாயகருக்கு சந்தோஷி மாதா (திருப்திக்கான கடவுள்) என்ற மகளும் உண்டு.

http://tamil.boldsky.com/insync/pulse/2015/different-love-stories-lord-ganesha-s-marriage-007717.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக