தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 20 மார்ச், 2015

பேய் இருக்கா? இல்லையா? பாங்கார்ஹ் கோட்டை என்ன சொல்கிறது (வீடியோ இணைப்பு)


ராஜஸ்தான் மாநிலத்தின் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ளது பாங்கார்ஹ் நகரம்.
மாதோ சிங் என்ற அரசனால் இந்த நகரத்தில் 1613ம் ஆண்டு, பாங்கார்ஹ் கோட்டை நிறுவப்பட்டுள்ளது.
ஒருசமயம், பாங்கார்ஹ் நகரம் குரு பாலா நாத் என்ற மந்திரவாதி ஒருவனால் சபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதையடுத்து அந்த நகரத்தில் மர்மமான முறையில் பல கெட்ட விடயங்கள் நடப்பது வாடிக்கையாகி விட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
உள்ளூர் மக்கள் கூறுகையில், இந்த ஊரில் புதிதாக யார் வீடு கட்டினாலும் அந்த வீட்டின் மேற் கூரை இடிந்து விழுந்து விடுகிறது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், இரவு வேளையிலும் சூரியன் அஸ்தமித்த பின்னரும் அந்த கோட்டைக்குள் சென்ற எந்த நபரும் உயிரோடு திரும்பியதில்லை என்று தெரிவிக்கின்றனர்.
அந்த மந்திரவாதி ஒரு நிபந்தனையை விதித்துள்ளார். அதாவது, அந்த கோட்டையின் நிழல் தன்மீது படாத வரை நான் இந்த நகரத்திற்கு எந்த தீங்கும் செய்யமாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பின்னர் வந்த அரசர் ஒருவர் அந்த கோட்டையின் உயரத்தை அதிகரித்தபோது அதன் நிழல் மந்திரவாதி மீது பட்டதால், அவர் கடும் கோபமடைந்து சாபமிட்டதாக கூறப்படுகிறது.
இதுதவிர இந்த கோட்டை பற்றி பல விதமான கதைகள் உலவுகின்றன. எது எப்படியோ அந்த கோட்டையை சுற்றி பின்னப்பட்டிருக்கும் கதைகளை உள்ளூர் மக்கள் நம்புகின்றனர்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியன் தொல்லியல் துறை சார்பாக அங்கே வைக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை அறிவிப்பு மேலும் பயத்தை அதிகரிக்கிறது.
அந்த எச்சரிக்கை பலகையில், சூரியன் மறைந்த பின்னரும், சூரியன் உதிக்கும் முன்னரும் யாரும் உள்ளே போகக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த கோட்டையை விட்டு ஒரு மைல் தூரத்திற்கு அப்பால் வைக்கப்பட்டிருக்கும் தொல்லியல் துறை அலுவலகமும் ஆவிக்கதைகளுக்கு கூடுதல் வலு சேர்ப்பதாகவே இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக