ஆப்பிள் வாட்ச்சில் என்ன இருக்கிறது? (வீடியோ இணைப்பு)!
ஆப்பிள் ஐபோன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் விற்பனைக்கு வரவிருக்கிறது.
அதில் ஏராளமான சிறப்பம்சங்கள் அடங்கியுள்ளன.
1. உடல் நலம் குறித்து முக்கிய தகவல்களை அளிக்கும் விதமாக பல சென்சார்களும்(sensor), செயலிகளும்(Features) இருக்கின்றது.
2. உங்களுக்கு தேவையானவற்றை அறிந்து கொள்ளும் Option-யை ஆப்பிள் வாட்ச் மிகவும் எளிமையாக்கியுள்ளது, Watch Screen-ல் கீழ் இருந்து மேல் புறமாக Swipe செய்தால் போதுமானது.
3. புதிய ஆப்பிள் வாட்ச் கிட்டத்தட்ட அனைத்து செயலிகளையும் சப்போர்ட்(Support) செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. பல கருவிகளை போன்றே ஆப்பிள் வாட்ச்களையும் நீங்கள் உங்களது குரலை கொண்டு இயக்க முடியும்.
5. ஐபோனுக்கு வரும் Notification-யை அறிந்து கொள்ள ஆப்பிள் வாட்ச் எச்சரிக்கை செய்யும்.
6. ஐபோனுக்கு வரும் குறுந்தகவல்களை ஆப்பிள் வாட்ச் மூலம் பார்த்து அதற்கு பதில் அளிக்கவும் முடியும்.
7. ஆப்பிள் வாட்ச் மூலம் நீங்கள் அழைப்புகளை ஏற்க முடியும்.
8. ஆப்பிள் வாட்ச் பேட்டரியானது, அதிகபட்சம் 18 மணி நேரம் வரை இருக்கும் என ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக்(Tim Cook) தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக