அதிசயத்தின் அடிப்படையில்: சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி உத்திரத்தில் சூரிய ஒளி சிவன்மேல் படுதல் சிறப்பு.
இத்திருக்கோவில் 5 கோபுரங்களுடன் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. கருவறையில் ஈசன் அழகுற காட்சியளிக்கிறார். இடது புறத்தில் தாயார் தனிசன்னதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கடம்பவன நாதருக்கு நேர் பின்புறத்தில் ஆறுமுகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார். வெளிப்புறத்தில் கடம்பசித்தர் சன்னதி உள்ளது. முருகப்பெருமான், கடம்பரிஷி பூஜித்து வழிப்பட்ட ஸ்தலம். தெற்கில் சித்தி விநாயகரும், கெஜலெட்சுமி தனி, தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
அசுரர் குலத்தை அழித்தப் பின், முருகப்பெருமானுக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது. பார்வதி தேவியர் அறிவுரைப்படி, தோஷ நிவர்த்தியாக, காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள பஞ்சகடம்ப ஸ்தங்களுக்கு வந்த முருகப்பெருமானுக்கு துணையாக முனிவர்களும் வந்தனர். முதலில் தேவூர் அருகில் உள்ள மஞ்சவாடிக்கு வந்த முருகப்பெருமான், மஞ்சளால் விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிப்பட்ட பின், பஞ்சகடம்ப ஸ்தலங்களான ஆதிகடம்பனூர்,அகரகடம்பனூர்,
மூன்று பவுர்ணமி தீர்த்தகுளத்தில் நீராடி, கடம்ப வனநாதரை அர்ச்சித்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும். திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கி.பி.12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமைவாய்ந்த இக்கோயில் முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. தொன்மை வாய்ந்த இக்கோயில் சோழப் பேரரசர்கள் வழிப்பட்ட தலம்.
+91 9787588363
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக