தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 19 மார்ச், 2015

ஆமணக்கு எண்ணெய்யின் மருத்துவ குணங்கள்

ஆமணக்கின் இலை, வேர், விதை ஆகியவை ஆயுர்வேத மருத்துவத்தில் பல வழிகளில் பயன்படுகின்றன.
விதைகளைப் பொடித்து நீரிலிட்டுக் காய்ச்சி மேலே மிதந்து வரும் எண்ணெயை சேமித்தும் ஆமணக்கு எண்ணெய் தயாரிப்பர்.
ஆமணக்கெண்ணெய் பொதுவாக வயிற்றைச் சுத்தம் செய்வதற்காகவும், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.
ஆமணக்கு வேர் மூட்டுவலிகள், சிறுநீர்ப்பை வலிகள், கீழ்முதுகுவலி, வயிற்றுக் கோளாறுகள், வீக்கங்கள் ஆகியவற்றைத் தணிக்க செய்யும் அற்புத மருந்தாகும். ஆமணக்கு இலையும் உள் மருந்தாகவும், வெளி மருந்தாகவும் பயன்படுகின்றது.
வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்கும், சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் வலி மற்றும் அடைப்பு ஆகியவற்றை குணப்படுத்தவும், நாட்பட்ட சீழ்பிடித்த ஆறாப் புண்களை ஆற்றவும் பயன்படுகின்றது.
ஆமணக்கு விதைகள் மலச்சிக்கலை உடைக்கவும் மூட்டு வலிகளை குணப்படுத்தவும், ஈரல் மற்றும் மண்ணீரல் நோய்களை குணப்படுத்துகிறது.
மாதவிலக்கு காலத்தின் போது மாதர்கள் அடிவயிற்றுவலி, இடுப்பு வலி என்று அவதிப்படும் போது விளக்கெண்ணெயை அடிவயிற்றின் மேல் பூசி வைக்க வலி விரைவில் தணிந்து போகும்.
நெறி கட்டிகள் ஏற்பட்டு வீக்கமும், வலியும் ஏற்பட்டால் விளக்கெண்ணெயை மேற்பூசி வைக்க ரத்த ஓட்டம் சீர்பட்டு வீக்கமும் வலியும் குறையும்.
படுக்க போகும் முன் கண்களைச் சுற்றிலும் சிறிது விளக்கெண்ணெய் விட்டு நன்றாக மசாஜ் செய்து கொண்டால் நன்றாக தூக்கம் வருவதோடு கண்களைச் சுற்றிய கருவளையங்கள் மாறிப்போகும். கண்களுக்கு குளிர்ச்சியும், பார்வைத் தெரிவும் உண்டாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக