தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 24 மார்ச், 2015

அழகு தரும் ஆபத்துக்கள்: ஷாக் தகவல் (வீடியோ இணைப்பு)


இயற்கை அளித்த அழகு இருக்கும் போது, மேலும் அழகுபடுத்துகிறேன் என்ற பெயரில் பெண்கள் அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துகின்றனர்.
ஆனால், அந்த அழகு சாதனப் பொருட்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கிறது.
கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு முதல் பாதநகங்களுக்கு போடும் நெயில் பாலீஸ் வரை பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களின் மூலம் தினசரி 600க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் நம் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சரும நோய்கள்
சரும பொலிவுக்காக நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் சேர்க்கப்படும் இராசயனப் பொருட்கள் உங்கள் சருமத்தை சேதப்படுத்துகிறது.
கிரீமை முகத்தில் அப்பளை செய்துவிட்டு வெயிலில் இருக்கும் போதும் பாருங்கள். சரும எரிச்சல் அதிகரிக்கும்.
நீங்கள் வெளியில் சென்று வந்த உடன் சருமம் ஒருமாதிரி வறட்சியாக இருக்கும்.
இதற்கெல்லாம் காரணம் அந்த கிரீமை பயன்படுத்துவது தான். அதிகபட்சமாக சரும புற்றுநோய் ஏற்பட கூட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
அலர்ஜி
அதிகப்படியாக அழகு சாதனப் பொருட்களை உபயோகப்படுத்துவதன் மூலம் பல வகையான அலர்ஜிகள் ஏற்படுகின்றன. சருமம், கூந்தல் மற்றும் சுவாச அலர்ஜிகள் ஏற்படுகிறது.
நீங்கள் முகத்தில் உபயோகப்படுத்தும் கிரீம்களை அதிகம் முகர்வதனால் சுவாச அலர்ஜி ஏற்பட்டு சுவாசிப்பதில் எரிச்சல், சுவாச குழாயில் பிரச்சனைகள் போன்றவை ஏற்படுகின்றன.
ஷாம்பூ மற்றும் கண்டீஷனர் உபயோகப்படுத்துவதன் மூலமாக தான் தற்போது நிறையப் பேருக்கு முடிவுடைதல், உச்சந்தலை வேர் பகுதிகளில் அலர்ஜி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாய் கூறப்படுகிறது
கண்களுக்கு பாதிப்பு
காஜல், மஸ்காரா, ஐ ஷேடோ போன்றவை நீங்கள் கண்களுக்கு உபயோகப்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள். இது கண் சார்ந்த நோய் தொற்றுகள் உருவாக காரணமாக இருக்கின்றது.
இதில் மஸ்காரா உபயோகப்படுத்துவதன் காரணமாக கண் பார்வை பறிபோவதற்கு கூட வாய்ப்புகள் இருப்பதாய் கூறப்படுகிறது.
இதில் இருக்கும் சூடோமோனஸ் எரூஜினோசா என்னும் இராசயன பொருள் கண் பார்வையை பாதிக்க ஏற்பட காரணமாக இருக்கிறது.
நகங்களுக்கு ஆபத்து
நகம் என்பது நமது உடலில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றும் பணியை செய்கிறது.
ஆனால், நாம் அதற்கு சில அழகு பூச்சு வேலைகள் செய்யும் போது அதில் உள்ள இராசயனங்கள் நகங்களின் வளர்ச்சியை தடுக்கிறது. இதனால், இறந்த செல்களின் வெளியேற்றம் அடையும் அளவில் குறைவு ஏற்படுகிறது.
சரும முதிர்ச்சி
சரும முதிர்ச்சி நீங்கள் அளவிற்கு அதிகமாக அழகு சாதன பொருட்களை உபயோகப்படுத்தும் போது அது எதிர்வினை பயன் தர ஆரம்பிக்கிறது.
உங்கள் சருமம் தனது இயல்பான தன்மையை தாண்டி வேகமாக முதிர்ச்சி அடையும். முகத்தில் சுருக்கங்கள் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக