2010ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தை தாயார் ஒருவர் தற்போது ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார். பிரித்தானியாவில் கடந்த 2010ம் ஆண்டு , பிரசவத்திற்காக வைத்தியசாலை சென்றுள்ளார் திருமதி ஓக்ஸ். அவருக்கு வயிறில் இரட்டைக் குழந்தை இருக்கின்ற விடையம் ஏற்கனவே ஸ்கேனிங் மூலம் அவருக்கு தெரியும். பிள்ளை பிறந்தவேளை ,முதல் பிள்ளை பெண் என அறிந்துகொண்ட அவருக்கு அடுத்ததாக அதிர்சி தான் காத்திருந்தது. அடுத்ததாக 5 நிமிடம் கழித்துப் பிறந்த ஆண் பிள்ளை மூச்சு எடுக்கவில்லை. அத்தோடு அவன் உடல் குளிர ஆரம்பித்துவிட்டது. பரிசோதித்த மருத்துவர்கள் அந்த ஆண் குழந்தை இறந்துவிட்டதாக அறிவித்தார்கள்.
பிரேதங்களை வைக்கும் அறைக்கு அக் குழந்தையின் உடலை கொண்டுசெல்ல முற்பட்டவேளை , இறுதியாக என் பிள்ளையை நான் கட்டி அணைக்கவேண்டும் என்று தாயார் கத்தியுள்ளார். அவர் ஏற்படுத்திய ரகளையால் அவர்கள் பிள்ளையின் உடலைக் கொடுத்துள்ளார்கள். தாயும் தந்தையும் இணைந்து அக் குழந்தையை கட்டி அணைத்து பிரியாவிடை கொடுத்துள்ளார்கள். ஏன்ன ஆச்சரியம் ! குழந்தை லேசாக முணக ஆரம்பித்துள்ளது. கை கால் களில் சிறிய அசைவு காணப்பட்டதோடு சற்று நேரத்தில் ஒரு முறை கண்களை திறந்து பார்த்துவிட்டு மூடியுள்ளது. உடனே எனது குழந்தை இறக்கவில்லை இன்னும் உயிரோடு தான் இருக்கிறது என்று தாயார் கத்திக் கதறியுள்ளார். ஆனால் வழமைபோல மருத்துவர்கள் நம்பவில்லை.
தாயார் ஏதோ பிரமையில் கத்துகிறார் என்று நினைத்துவிட்டார்கள். இருப்பினும் தாதி(நர்ஸ்) உடனே பிள்ளையை வாங்கி சோதித்துப் பார்த்து உயிர் இருப்பதாக கூறியுள்ளார். உனனே அவர்கள் சிகிச்சை கொடுத்துள்ளார்கள். அதனால் குழந்தை காப்பாற்றப்பட்டு இன்றோடு 5 வயதை எட்டியுள்ளது. மிகவும் திடகாத்திரமாகவும் , எந்த நோய் நொடிகள் இன்றியும் வளர்ந்துள்ளார்கள். இதனை தான் "உண்மையான் அன்பு" மற்றும் காதல் என்பார்கள் என்று தாயார் கூறியுள்ளார். உண்மையான அன்புக்கு ஒரு சக்தி உண்டு என்று அவர் கண்ணீருடன் தனது கதைச் சொல்லி இருக்கிறார். இது பல்லாயிரக்கணக்கான மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக