தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 10 மார்ச், 2015

புற்றுநோய்களை கண்டுபிடிக்கும் நாய்கள்

மனிதனின் சிறந்த நண்பனாக விளங்கும் நாய்களுக்கு தைராய்டு புற்றுநோய்களை கண்டுபிடிக்கும் ஆற்றல் காணப்படுவதாக ஆராய்ச்சி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் Arkansas பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவு ஆராய்ச்சியாளர்களே இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், மனிதனின் சிறுநீரை முகர்ந்து பார்ப்பதன் மூலம் நாய்களால் 90 சதவீதம் சரியாக இந்நோயினை கண்டுபிடிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.
இதனை அடிப்படையாகக் கொண்டு 62, 450 வரையான தைராய்டு புற்றுநோயாளர்களை இந்த வருடம் இனம் காண திட்டமிடப்பட்டுள்ளதுடன், இந்நோயினால் 1,950 பேர் வரையானவர்கள் இறப்பை எதிர்நோக்கியுள்ளனர் என புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக