தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 30 மார்ச், 2015

சத்தான உணவுகளை சமைப்பது எப்படி? ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சூப்பரான டிப்ஸ்

வாழ்நாள் முழுதும் நோயில்லாத ஆரோக்கியமான வாழ்க்கையே வாழவே அனைவரும் விரும்புவார்கள்.
இதற்கு நம்முடைய உணவு பழக்கவழக்கங்கள் சரியான முறையில் இருக்க வேண்டும்.
சரியான உணவு முறைகள் என்பது உணவுகளை சரியான அளவில் எடுத்துக் கொள்வது மட்டும் இல்லை, சரியான உணவு வகைகளை சரியான முறைகளில் சமையல் செய்து சரியான அளவில் எடுத்துக் கொள்வதே ஆகும்.
மேலும் அனைத்து வகை உணவுப் பொருட்களும் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் சத்துக்களை அதிகமான அளவிலோ அல்லது குறைவான அளவிலோ கொண்டுள்ளது.
இந்த உணவுப் பொருட்களை சமைப்பதற்கு முன் இவற்றில் இருக்கும் கலோரிகள், வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் அளவு சமைத்த பிறகு அதே அளவில் இருப்பதில்லை. சில சமயங்களில் குறைந்தும், சில சமயங்களில் அதிகரித்தும் காணப்படும்.
உதாரணத்திற்கு உருளைக்கிழங்கை சமைப்பதற்கு முன் கிழங்கில் உள்ள கார்போஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து மற்றும் கலோரிகளின் அளவு மாறுபடும்.
உருளைக்கிழங்கு– கலோரி 77 Kal, கார்போஹைட்ரேட் 18 gm, புரோட்டீன் 2 gm, கொழுப்பு 0 gm, நார்ச்சத்து 2 gm.
உருளைக்கிழங்கு(வேகவைத்தது)– கலோரி 87 Kal, கார்போஹைட்ரேட் 20 gm, புரோட்டீன் 2 gm, கொழுப்பு 0 gm, நார்ச்சத்து 2 gm.
உருளைக்கிழங்கு(எண்ணெயில் பொரித்தது)- கலோரி 134 Kal, கார்போஹைட்ரேட் 28 gm, புரோட்டீன் 3 gm, கொழுப்பு 5 gm, நார்ச்சத்து 2 gm.
உருளைக்கிழங்கு(Mashed)- கலோரி 113 Kal, கார்போஹைட்ரேட் 17 gm, புரோட்டீன் 3 gm, கொழுப்பு 4 gm, நார்ச்சத்து 1 gm.
இவ்வாறு மாறுபடும் சத்துக்களின் அளவு தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் அசைவ உணவுகளான மீன், இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றிற்கும் பொருந்தும்.
எனவே உணவுப்பொருட்களை சமைக்கும் போது நம்முடைய அன்றாட தேவையை கருத்தில்கொண்டு சமையலைக்கு பயன்படுத்தும் எண்ணெய், சர்க்கரை மற்றும் நெய் போன்ற அதிக கலோரி தரக்கூடிய பொருட்களை குறைத்துக் கொள்வது நல்லது.
மேலும் நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்ப்பது நலம்.
நீராவியில் வேகவைத்த காய்கறிகளை சாப்பிடலாம், நீர் அல்லது நீராவியில் வேகவைத்த மீன், ஆடு மற்றும் கோழி இறைச்சி போன்றவற்றை சரியான அளவில் தினமும் எடுத்துக் கொள்வது உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்காமல் இருக்கும்.
கரையும் வைட்டமின்கள்
கலோரிகள் வேறுபடுவது போன்று, உணவில் உள்ள சத்துக்களின் அளவும் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உணவுப் பொருட்களில் ஏற்படும் வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் இழப்பு என்பது காய்கறிகளை நறுக்கி அவற்றை தண்ணீரில் கழுவும் போதே தொடங்குகிறது.
1. நீரில் கரையும் வைட்டமின்கள் (வைட்டமின் B, C)
2. கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் (வைட்டமின் A, D, K)
எனவே நீரில் கரையும் வைட்டமின்களின் இழப்பை தடுக்க காய்கறிகளை நறுக்கியபின் கழுவதைவிட, அதற்கு முன்பாகவே கழுவிய பின்னர் நறுக்க வேண்டும். அதேபோன்று காய்கறிகளை மிக சிறிய துண்டுகளை நறுக்க கூடாது.
மேலும் உணவுப் பொருட்களை நீண்ட நேரம் வேகவைப்பதை தவிர்க்க வேண்டும்.
இதேபோன்று காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவு தண்ணீரில் வேகவைத்து பின் நீரை வடித்து வைத்து சமைப்பதை தவிர்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக