தானிய வகைகள் என்பது நம் அன்றாட வாழ்வில் பெரும் பங்கு வகிக்கின்றது.
நவதானியங்கள் என்பது சமையிலில் ருசிக்கு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. இந்த தானிய வகையில் ஒன்று தான் கோதுமை.
கோதுமை என்பது டிரிடிகம் இனத்தை சேர்ந்த தானிய வகைகளில் ஒன்றாகும். இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் ஏத்தியோப்பிய விலை நிலங்களாகும்.
தொல்பொருள் ஆராய்ச்சிகள் முதன் முதலில் வளர் பிறை மற்றும் கழிமுக பகுதிகளிலும் பயிரிடப் பட்டதை தெரிவிக்கின்றன. தென் கிழக்கு துருக்கியில் கோதுமை பயிரிடப் பட்டதாக அண்மை ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஏனைய எந்த பயிர்களை காட்டிலும் அதிக பரப்பளவில் உலகின் பெரும்பாலான இடங்களில் கோதுமை பயிர் செய்யப்படுகிறது.
உலக வணிகத்தில் கோதுமை வாணிபம் ஏனைய அனைத்து பயிர் வாணிபங்களின் மொத்த தொகையிலும் அதிகமாகும். உலகளவில் மனித உணவில் தாவர புரதத்தின் முக்கிய ஆதாரமாக கோதுமை விளங்குகிறது.
அரிசிக்கு அடுத்தபடியான மனித உணவு பயிராகவும் விளங்குகிறது. மனித நாகரிக வளர்ச்சியில் கோதுமை முக்கிய பங்களிப்பு வழங்கியது.
பெரிய பரப்பளவில் எளிதாக பயிரிடக் கூடியதாகவும் நீண்ட காலத்திற்கு களஞ்சியப் படுத்தி வைக்கக் கூடியதாகவும் இருப்பதே கோதுமை சாகுபடி பரப்பு அதிகரிக்க காரணம்.
கோதுமையின் மகத்துவங்கள்
முதுகுவலி, மூட்டுவலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து, அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள கொடுக்க அந்த வலி குணமாகும்.
வயிற்றில் புளிப்புத்தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி செய்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.
கோதுமை மாவை அக்கிப்புண், நெருப்பு பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணெய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.
கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.
வியர்வைக்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும்.
கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கு உடல் பலம் அதிகரிக்கும். ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும்.
கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊற வைத்து, காலையில் அடித்து பசையாக்கி, அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகின்ற பால் கோதுமைப் பாலாகும். இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும்.
கோதுமை கஞ்சி
கோதுமை மாவை தண்ணீரில் நன்றாக கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும், அதனுடன் உப்பு , காய்ச்சிய பாலை சேர்க்கவும்.
கஞ்சியை அடுப்பில் வைத்து சிம்மில் காய்ச்சவும் ஏலக்காய்யை பொடி செய்து சர்க்கரையும் பாதி வெந்த பிறகு சேர்த்து நன்றாக கிளறவும்.
கோதுமை மாவு வெந்து கஞ்சி வாசம் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கினால், சுவையான கோதுமை கஞ்சி ரெடி.
பயன்கள்
கோதுமை கஞ்சி செய்து சாப்பிட காசநோய் உள்ளவர்கள் விரைவில் உடல்நலம் தேறுவார்கள்.
உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவும்.
ஊட்டசத்து குறைபாடை சரிசெய்யும்.
மாதவிலக்கு காலத்தில் ஏற்படுகின்ற அதிகப்படியான ரத்தப்போக்கு குறையும்.
கோதுமை ரவை உப்புமா
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்ப, மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்பு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மென்மையாக வதங்கும் வரை வதக்கி விட வேண்டும்.
பிறகு அதில் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து, பின் கோதுமை ரவையை சேர்த்து, தீயில் மிதமான அளவில் வைத்து, தண்ணீர் வற்றும் வரை கிளறி விட்டு இறக்கினால், சுவையான கோதுமை ரவை உப்புமா ரெடி.
|
தொலைக்காட்சி!!
இந்த வலைப்பதிவில் தேடு
வியாழன், 19 மார்ச், 2015
கோதுமையின் மகத்துவங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக