தாலி என்பது மருவி வந்த வார்த்தை மட்டும்தான் , தால பத்திரம் மருவி தாலியானது தவிர,
எமது முன்னோர்கள் ஒரு நூலில் மஞ்சள் தடவி பின்பு ஒரு ஓலையோ அல்லது காகிதத்திலோ ஒரு ஆண்மகன் பெயரும் மற்றும் பெண்மகள் பெயரும் எழுதி நூலில் சேர்த்து அதன் பெயர் "தாலபத்திரம்" என்று அழைக்கபட்டது பின்பு மருவி தாலி என்று அழைப்பட்டது
மதங்களுக்கும் , சாதிகளுக்கு ஏற்ற போல் தாலிகள் செய்வதும் வியாபார நோக்கமா தவிர வேறொன்றும் இல்லை ,
தால பத்திரம் மூலம் செய்யும் திருமணம் "தமிழ் திருமணம்"
ஆனால் நமது வரலாற்றையும் வாழ்வியலில் மறப்பதுதானே தமிழனின் குணம் ,
எப்படி வயலின் கம்பிகள் வெவ்வோறு இருந்தாலும் வயலினை மீட்டுகின்ற போது இரண்டு கம்பிகள் சேர்ந்து ஒரே இசையை தருவது போல்தான் வாழ்க்கையும் .
இரண்டும் பேரும் சேர்ந்து வாழ்க்கை என்று வருகிற போது இரு வேறு மனங்களாக இருந்தாலும் ஒரே வாழ்க்கையாக வாழ்வதுதான் வாழ்க்கையாகும்
இங்கு புரிதலும் , விட்டு கொடுத்தலும் மட்டும்தான் வாழ்க்கை "தாலி" என்பது வாழ்க்கையின் ஒரு மனகட்டுப்பாடு தவிர
வேறொன்றும் இல்லை !!!!
தமிழுடன்
சிலம்பரசன் தமிழரசன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக